SHARE
image_pdfPRINT

பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் முகத்தை முழுமையாக மூடக்கூடிய புர்கா, நிகாப் போன்றவற்றை அணிந்துகொண்டு பாடசாலை வளாகத்தினுள் வரமுடியாது என மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

அதேவேளை மாணவர்களின் பெற்றோர்களும் முகத்தை முழுமையாக மூடக்கூடிய ஆடைகளை அணிந்துகொண்டு பாடசாலைக்குள் நுழைய முடியாது எனவும், இது தொடர்பாக தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்