SHARE
image_pdfPRINT

கல்முனை சாய்ந்தமருது பகுதியில் சற்று முன்னர் பாதுகாப்பு தரப்பினருக்கும் குழு ஒன்றுக்குமிடையில் துப்ப்பாக்கிபிரயோகங்கள் இடம்பெற்றுள்ளது.

அங்கு சுற்றிவளைப்பு சோதனையில் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபட்டிருந்த வேளையில் குழு ஒன்று அவர்களுக்கு எதிராக துப்பாக்கிப்பிரயோகங்களை மேற்கொண்டுள்ளது.

இதனையடுத்து இரு தரப்பினருக்குமிடையே சிறிது நேரம் அப்பகுதியில் மோதல் இடம்பெற்றுள்ளது. அதேவேளை குறித்த பகுதியில் 3 வெடிப்பு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் மறைந்திருந்த தற்கொலை குண்டுதாரிகள் குறித்த வெடிகளை வெடிக்க வைத்திருக்க கூடும் என பாதுகாப்பு தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.