SHARE
image_pdfPRINT

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு சிறீலங்கா அரசுக்கு மேலதிக கால அவகாசம் வழங்கக்கூடாது எனவும் அனைத்துலக விசாரணையே வேண்டும் என்பதை வலியுறுத்தி மட்டக்களப்பில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட இப்பேரணி, இன்று காலை கல்லடி பாலத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு மாபெரும் மக்கள் பேரணியாக காந்தி பூங்காவை சென்றடைந்தது.