SHARE

யாழ்.வல்வெட்டித்துறை ஊரிக்காடு பகுதியில் உடலில் எரிகாயங்களுடன் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். 

இடைக்காடு அக்கரை பகுதியை சேர்ந்த விஸ்ணுகுமார் தனுசன் (வயது 19) எனும் இளைஞனே சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். 
ஊரிக்காடு பகுதியில் கோழிப்பண்ணை ஒன்றில் குறித்த இளைஞன் வேலை செய்து வருவதாகவும் , நேற்றைய தினம் ஞாயிற்றுகிழமை மாலை கோழிப்பண்ணை கழிவு தொட்டிக்குள் விழுத்து கிடந்ததை அவதானித்தவர்கள் அவரை மீட்டு ஊரணி வைத்திய சாலையில் அனுமதித்தனர். 

இருந்த போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் தெரிவித்தனர். அதனை அடுத்து உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. 

குறித்த சடலத்தில் சில இடங்களில் எரிகாயம் காணப்படுவதாகவும், அதனால் குறித்த இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்து இருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.