SHARE
image_pdfPRINT

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை வெளிப்படுத்த கோரியும் , அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரியும் யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை 10.30 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
சமவுரிமை இயக்கம்  மற்றும் வட பகுதியில். கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் பாதுகாவலர் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் தெற்கை சேர்ந்த பெரும்பான்மையினத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.