SHARE
image_pdfPRINT

விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் கொத்தணிக் குண்டுகளும், இராசாயன ஆயுதங்களும் பாவித்ததாக தமிழர் தரப்பு முன்வைக்கும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை, அவ்வாறு பாவித்ததாக ஆதாரங்களும் இல்லை. சர்வதேச விசாரணையின் மூலம் இதனை நிருபிக்க வேண்டிய அவசியம் எமக்கில்லை  என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.

அத்துடன்,  இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு அனைத்துலக பொறிமுறை அவசியமில்லை என்றும் அவ்வமைச்சு அறிவித்தது.

இரசாயன ஆயுதங்கள் சமவாய திருத்த சட்டம் மீதான விவாதம் இன்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்றபோது விடுதலைப்புலிகளுடனான இறுதி யுத்தத்தில் இலங்கை இராணுவம் இரசாயன ஆயுதங்களையும், கொத்தணிக் குண்டுகளையும் பாவித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்திய நிலையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் உரையின் போது அவர் மேற்கண்ட விடயத்தை முன்வைத்தார்.