SHARE

யுத்தக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள 58 படைப்பிரிவின் முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத்தின் பிரதானியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள 58 ஆவது படைப்பிரிவின்  தளபதியான சவேந்திர சில்வா மீது சர்வதேச அளவில் யுத்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நியமனததை மேற்கொண்டுள்ளார்.

யுத்த குற்றச்சாட்டுகளிற்குள்ளான அதிகாரிகளிற்கு பதவி உயர்வு போன்றவற்றை வழங்கக்கூடாது என சர்வதேச அமைப்புகள் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்துவரும் நிலையில்  ஜனாதிபதி இந்த நியமனத்தை மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் உள்நாட்டுப்போரின் முடிவின் பின்னர் ஐக்கியநாடுகளிற்கான பிரதிநிரந்தர வதிவிடப்பிரதிநிதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கபட்டமையும் அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email