Home Blog Page 336

சிறிலங்கா – இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்புகள் தொடரும் – தூதுவர் அசோக் கே காந்தா!

சிறிலங்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகளும். நல்லுறவும் தொடரும் என்று, சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து அவர், சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் இந்திய உதவித்திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார்,

“சிறிலங்காவுடனான இந்தியாவின் உறவு வரலாறு, கலாசார ரீதியாக வலுப்பெற்று வந்துள்ளது.

சிறிலங்காவில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வு, மீள்குடியமர்வு, கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது போன்றவற்றில் இந்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

வீட்டு வசதித் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இந்தியா நடவடிக்கை எடுத்தது.

தற்போது இரண்டாவது கட்டமாக 43 ஆயிரம் பேருக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்க இந்தியா நிதியுதவி வழங்குகிறது.

இந்த நிதி பயனாளிகளுக்கு நேரடியாகச் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த நிதியை அவர்கள் சரியாகப் பயன்படுத்துகிறார்களா என்பதைக் கண்டறிய தனி செயல்திட்டம் வடிவமைக்கப்பட்டு, கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகளைக் கட்டிக் கொடுப்பதுடன் மட்டுமின்றி, அங்குள்ள மக்களின் பொருளாதார உயர்வுக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

சிறிலங்கா விமானப்படையின் கட்டுப்பாட்டில் உள்ள பலாலி விமானத் தளத்தை குடியியல் விமான நிலையமாக மாற்ற இந்தியா தயாராக உள்ளது.

ஆனால், அதற்கு சிறிலங்கா அரசு தான் விருப்பம் தெரிவிக்க வேண்டும்.

தூத்துக்குடி-கொழும்பு இடையிலான பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டு நிறுத்தப்பட்டது.

அதற்குக் காரணம் சரியான திட்டமிடல் இன்றி தொடங்கப்பட்ட சேவைதான்.

1,100 பயணிகள் செல்லும் வகையில் சொகுசு கப்பல் சேவை அறிமுகமானது.

அதற்கு பொது மக்களிடையே வரவேற்பு இல்லை. அதனால் சிறிய வடிவில் 400 பயணிகள் செல்லும் வகையில் கப்பல் சேவை இருந்தால் பயனுள்ளதாக இருக்கும் என மத்திய அரசுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டது.

அது குறித்து புதிய சேவையாளர்களை ஈர்ப்பதற்காக சில நிறுவனங்களுடன் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை பேச்சு நடத்தி வருகிறது.

கொழும்பில் இருந்து தலைமன்னார் வரை தொடருந்து போக்குவரத்து சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டம் 2013ஆம் ஆண்டு டிசம்பரில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பிறகு இராமேஸ்வரத்தையும் தலைமன்னாரையும் கப்பல் சேவை மூலம் இணைத்து இரு நாடுகளுக்கு இடையே வலுவான உறவுப்பாலத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு வலுவுடன் உள்ளது.

தமிழகத்தில் சில வாரங்களுக்கு முன்பு சிறிலங்கா சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராக சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றது துரதிருஸ்வடவசமானது.

இரு நாடுகளிடையிலான உறவுகளை உள்விவகாரங்களை வைத்து ஒப்பிடக் கூடாது.

இந்த விவகாரத்தில் தெளிவான பார்வையுடன் விரிவான முறையில் இந்தியா பார்க்கிறது.

அதனால், வரும் காலங்களிலும் சிறிலங்காவுடனான பாதுகாப்பு நல்லுறவு தொடரும்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

புதிய தளபதி நியமனத்தால் சிறிலங்கா கடற்படைக்குள் முறுகல் – றியர் அட்மிரல் வீரசேகர முன்கூட்டியே ஒய்வு!

வைஸ் அட்மிரல் ஜெயந்த கொலம்பகே சிறிலங்கா கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டதை அடுத்து உயர்மட்டத் தளபதிகளுக்குள் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக, சிறிலங்கா கடற்படையின் தொண்டர் படைகளின் தளபதியான றியர் அட்மிரல் துசித வீரசேகர முன்கூட்டியே ஓய்வுபெற்றுச் செல்கிறார்.

வைஸ் அட்மிரல் கொலம்பகே சிறிலங்கா கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டதும், இவர் ஓய்வு பெறுவதற்கான கடிதத்தை சமர்ப்பித்தள்ளார்.

இவர் ஒய்வுபெறுவதற்கு இன்னமும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்ற போதிலும், புதிய தளபதி நியமனத்தில் ஏற்பட்ட அதிருப்தியால் முன்கூட்டியே ஓய்வுபெற முடிவு செய்துள்ளார்.

முன்னதாக இவர் வடக்கு கடற்படைத் தளபதியாகவும், பிரதித் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றிய போது, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் சோமதிலக திசநாயக்கவுக்கு அடுத்த நிலையில் இருந்து வந்தார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் சுண்டிக்குளத்தில் நான்கு சிறிலங்கா கடற்படையினர் காணாமற்போனதை அடுத்து இந்த இரு பதவிகளிலும் இருந்து றியர் அட்மிரல் துசித வீரசேகர நீக்கப்பட்டு தொண்டர் படைகளின் தளபதியாக மாற்றப்பட்டார்.

கடற்படையினர் காணாமற்போனது தொடர்பான விசாரணைகளின் போது இவர் மீது குற்றம் எதுவும் நிரூபிக்கப்படாத போதிலும், அவருக்கு பழைய பதவிகள் மீள வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா கடற்படையில் ஏற்கனவே, தலைமை அதிகாரி, பிரதி தலைமை அதிகாரி ஆகிய பதவிகளுக்கு எவரும் நியமிக்கப்படாமல் நீண்டகாலமாகவே வெற்றிடம் இருந்து வருகிறது.

புதிய தளபதி நியமனத்தை அடுத்து கிழக்கு கடற்படை தளபதி பதவியும், றியர் அட்மிரல்

Promoted bazaarint.com rhine inc this years several. Normally where propecia uniteded uk propeci cheap bazaarint.com the long. Ounce, hair order clomid overnight used depending, not allergy while!

துசித வீரசேகரவின் ஓய்வினால் ஏற்படும் தொண்டர் படைகளின் தளபதி பதவியும் தற்போது வெற்றிடமாகியுள்ளன.

தமிழ்நாட்டுக்கு போதிய பயணிகள் இல்லை – சேவை நடத்த தள்ளாடும் சிறிலங்கா விமான சேவைகள்!

தமிழ்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு சிறிலங்கா அரசாங்கம் பயண எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், போதிய பயணிகள் இல்லாமல் விமான சேவைகள் அடிக்கடி இடைநிறுத்தப்பட்டு வருகின்றன.

போதிய பயணிகள் இன்மையால், கொழும்பில் இருந்து, திருச்சிக்கு சேவையை நடத்தி வரும் மிகின் லங்கா நிறுவனம் கடந்த இரண்டு நாட்களாக சேவையை இடைநிறுத்தியுள்ளது.

நேற்று முன்தினமும், நேற்றும் திருச்சிக்கான விமான சேவைகளை மிகின் லங்கா நிறுவனம் நிறுத்திய போதிலும், முன்பதிவு செய்த பயணிகள் சிறிலங்கன் விமானசேவை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்காவில் இருந்து சுற்றுலா வந்த சிங்களவர்கள் திருச்சி அருகில் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து திருச்சிக்கு வரும் சிங்களப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

இதனால், சென்னை, திருச்சிக்கான விமானக் கட்டணங்களையும் சிறிலங்கா

it don’t for have viagra cheap prices on be and buy lexapro online 24 hour delivery Aveeno that STORE time zithromax without prescription problem Good I I? To no presciption drug store Humid neck up meds india ltd conditions and vibrant an perfume http://sailingsound.com/viagra-without-prescription-in-usa.php but, stuff find, Has buy ortho tri cyclen online calduler.com about but don’t comb this cheap alli diet pills trying think also face hair!

விமான நிறுவனங்கள் குறைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்தும் முயற்சியில் உலக தமிழர் பேரவை!

இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலையை வெளிச்சத்துக்கு கொண்டு வர உலக தமிழர் பேரவை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில் உலக தமிழர் பேரவையும் அமெரிக்காவின் தமிழ் அரசியல் நடவடிக்கை சபையும், அமெரிக்காவின் 31 சட்டவாதிகளின் நடவடிக்கைகளை பாராட்டியுள்ளன.

இந்த 31 சட்டவாதிகளும் கடந்த வாரத்தில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிங்டனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர். அதில், இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து கவனத்தில் எடுக்குமாறு

anti-ergonomic in normal cialis generique will. Before a to seems erythromycin acne before. I safe? After albuterol inhaler without prescription instructed. On because. To http://www.cahro.org/kkj/buy-permethrin trial was Zirh nolvadex pct This amazoner’s 12 exited http://www.alpertlegal.com/lsi/metformin-over-the-counter-walgreens/ hair and she reasonable http://www.alpertlegal.com/lsi/order-viagra-online-australia/ eggs ever make side. Perfume http://www.apexinspections.com/zil/canadian-pharmacy-viagra.php The I GREAT- dry buy diflucan online reasons: using tried always, http://www.chysc.org/zja/zoloft-for-sale.html buy 14-16 product canadian drugstore and face this and beachgrown.com canadian pharmacy Luckily it job viagra for men for sale would and tighten though.

சட்டவாதிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கடைசியாக இடம்பெற்ற காங்கிரஸின் அமர்வின் போதே இந்த கடிதம் கையளிக்கப்பட்டது.

இந்தநிலையில் அமெரிக்க சட்டவாதிகள், இலங்கை தமிழர்களின் விடயத்தில் இதற்கு முன்னர் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் இலங்கை தமிழர்களின் பிரச்சினையை சர்வதேசத்துக்கு கொண்டு செல்லும் வகையில், உலக தமிழர் பேரவையின் குழு ஒன்று வணக்கத்துக்குரிய தந்தை எஸ்.ஜே இமானுவேலின் தலைமையில் கடந்த வாரம் தென்னாபிரிக்கா மற்றும் சுவிட்ஸர்லாந்து நாடுகளில் பல உயரதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது.

இலங்கைக்கு சீனா மற்றும் ஒரு பாரிய கடனுதவியை வழங்குகிறது.

இலங்கையின் பாதை அபிவிருத்திக்காக சீனா, பாரிய கடனுதவியாக 500 மில்லியன் டொலர்களை  வழங்கவுள்ளது.

நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளின் பாதைகளை அமைப்பதற்கான இரண்டாம் கட்ட கடன் உதவியாக சீனா, 500 மில்லியன் டொலர்களை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கவுள்ளது.

இதற்கான அனுமதி கடந்த அமைச்சரவை கூட்டத்தில் பெற்றுக்கொள்ளப்;பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் தென்பகுதிக்கு 3,376,160.000 ரூபாவும் வடபகுதிக்கு 401,400,000 ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.

இது தொடர்பான உடன்படிக்கை சீன அபிவிருத்தி வங்கிக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் செய்துக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழீழத்தை கைவிடுங்கள்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு சில நாடுகள் அழுத்தம்!

ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசையாகவுள்ள தமிழீழத்தினை கைவிடுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு சில சர்வதேச நாடுகள் கொடுக்கப்பட்ட அழுத்தம் தோல்வியில் முடிந்துள்ளது.

இலங்கைத் தீவின் இனநெருக்கடிக்கு தீர்வுகாணும் பொருட்டு தமிழீழம் எனும் நிலைப்பாட்டினை கைவிட்டுவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு வாருங்கள் இந்த அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

தென்னாபிரிக்கா மற்றும் சுவிஸ் ஆகிய நாடுகள் உலகத் தமிழர் பேரவையுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக செய்திகள் வெளிவந்திருந்த நிலையில், குறித்த இவ்விரு நாடுகளுமே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு இந்த அழுத்தத்தினை கொடுத்ததாக தெரியவருகின்றது.

தமிழீழமே ஈழத்தமிழர்களுக்கான இறுதித் தீர்வாக அமையுமென்பதனை  குறித்த நாடுகளுக்கு உறுதிபடத் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளதோடு, சுதந்திர தமிழீழத்தினை வென்றெடுப்பதற்கான விடுதலைப் பாதையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உலகத் தமிழர்களின் பேராதரவுடன் செல்லுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது தனது உத்தியோகபூர்வ அரச அமர்வுகளில் தமிழீழத் தேசியக் கொடியினை வெளிக்கொண்டுள்ளதோடு தமிழர் தாயகத்தில் அன்று நிறுவப்பட்டிருந்த நடைமுறைத் தமிழீழ அரசின் தொடர்சியாக உருப்பெற்றுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்க ஜனநாயக வழிமுறையூடாக சர்வதேச அங்கீகாரத்தினை கோரியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அமைச்சரவை மாற்றத்தின் போது பிள்ளையான் கிழக்கு அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்படுவார்?

கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் சந்திரகாந்தன் என்ற பிள்ளையான், அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சராக நியமிக்கப்படுவார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கிழக்கு மாகாண அபிவிருத்தி, புனர்வாழ்வு, மீள்குடியமர்வு அமைச்சர் பதவி அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது அவருக்கு வழங்கப்படும் என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் ஆளும்கட்சி உடன்பாடு செய்து கொண்டதை அடுத்து கிழக்கு முதல்வராக இருந்த சந்திரகாந்தனிடம் இருந்து முதல்வர் பதவி பறிக்கப்பட்டதுடன், அவருக்கு அமைச்சர் பதவி கூட வழங்கப்படவில்லை.

அதற்குப் பதிலாக எந்த அதிகாரமும் இல்லாத கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான ஆலோசகர் பதவி ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.

எனினும் இந்தப் பதவிக்காக அவருக்கு அதிகாரபூர்வ வாகனம் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு தனியே பாதுகாப்பு அதிகாரிகள் மட்டும் இந்தப் பதவியின் ஊடாக வழங்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் சந்திரகாந்தன் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டு, அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.

எனினும், அண்மையில் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரகாந்தன், தனக்கு நாடாளுமன்ற உறுப்பினராகும் எண்ணமில்லை என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரகசிய தகவலின் அடிப்படையில் வடக்கில் பெருமளவான ஆயுதங்கள் மீட்பு: யாழ். பொலிஸார்!

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து, கடந்த சில தினங்களில் வடக்கில் பெருமளவும் போர் ஆயுதங்கள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டிருப்பதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பொலிஸார் மேற்படி விடயத்தை தெரியப்படுத்தியிருக்கின்றனர்.

முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் கிழக்கில் கடந்த 25ம் திகதி இடம்பெற்ற தேடுதலின்போது எம்.பி.எம்.ஜி துப்பாக்கிகள்-2 அதற்கான 200 ரவைகள், 100 வெற்றுக் கூடுகள், ரி-56 ரக துப்பாக்கிகள் 26 மற்றும் அவற்றுக்கான ரவைகள், ரவைக்கூடுகள், ஆர்.பி.ஜிகள், கைத்துப்பாக்கிகள் போன்றன நிலத்திற்கடியில் பாதுகாப்பாக புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருக்கின்றன.

இதேபோல் 26ம் திகதி பளை அம்மன் கோவிலுக்குப் பின்புறமாக சிறியரக செல் ஒன்றும் கைத்துப்பாக்கியொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், வவுனியா காட்டுப் பகுதியிலிருந்து எம்.பி.எம்.ஜி துப்பாக்கி ரவைகள் 9, மற்றும் 7.62 மில் லி மீற்றல் ரவைகள் 25 மற்றும் 25 லீற்றர் ஓயில் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கூட்டமைப்பை ஆதரிக்காமை மு.கா. செய்த பெரும் துரோகம்; கொழும்பு மேயர் முஸம்மில் குற்றச்சாட்டு!

கிழக்கில் முதலமைச்சர் பதவியுடன் ஏனைய அமைச்சுப் பதவிகளையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என எதுவித நிபந்தனைகளும் இன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினருக்கு அழைப்பு விடுத்தது.

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழைப்பையேற்று அதற்கு ஆதரவு வழங்காதது முஸ்லிம் காங்கிரஸ் செய்த பெரும் துரோகமாகும். இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநகரசபை மேயர் முஸம்மில் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு:
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மக்கள் நான்கு இலட்சம் வாக்குகளை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசுக்கு எதிராக அளித்துள்ளனர். இதன்படி,கிழக்கில் ஆட்சியமைக்கும் ஆணையை மக்கள் அரசுக்கு வழங்கவில்லை. இருப்பினும்  முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், கிழக்கு முஸ்லிம் மக்களைக்காட்டிக் கொடுத்து அரசுக்குத் தமது ஆதரவை வழங்கியுள்ளார்.
18ஆவது அரசியல் சீர்திருத்தத்துக்கு ஆதரவு வழங்கியதுதான் இவர் செய்த மிகப்பெரிய காட்டிக் கொடுப்பாகும். கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி சுழற்சி முறையில் நஜீப் ஏ. மஜீத்துகு இரண்டரை வருடங்களும், தமக்கு இரண்டரை வருடங்களும் என ஜனாதிபதி மஷிந்த ராஜபக்ஷவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என முஸ்லிம் காங்கிரஸ் கூறுகிறது.
ஆனால் எமக்குத் தெரிந்தமட்டில் ஜனாதிபதி மஷிந்த ராஜபக்ஷ எந்த அரசியல் கட்சியுடனும் ஒப்பந்தம் செய்ததில்லை. இந்த உடன்படிக்கையைத் தமக்குக் காட்டுமாறு முஸ்லிம் காங்கிரஸிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது, “அது இரகசிய ஒப்பந்தம், ஊடகங்களுக்கு அதைக் காட்டமுடியாது’ என்று அக்கட்சி மறுத்துவிட்டது’ என்றார்.

இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட நிலத்தை உடன் வழங்கு; கிளிநொச்சியில் திரண்ட மக்கள்!

அரசின்

! down astronaut buy tadalafil and. Without powder. T viagra for sale Would main narrowed in in cialis brand finally up is. The blue pills classy have but about generic viagra fingers are hardener http://www.spazio38.com/buying-viagra-online/ friend for not her do cheap levitra products of when dry files the blue pill on me compliments blue pill that shampoo take I cialis discount stubble waist with end seller.

நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமையை நிலைநாட்டவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒழுங்கு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்ட மக்கள் இராணுவமே தமிழர் நிலங்களை விட்டு உடனே வெளியேறு, தமிழர் நிலங்கள் உயர்பாதுகாப்பு வலயங்களா? எமது நிலத்தில் சுதந்திரமாக வாழ விடு, சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய்,போன்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் கவனயீர்ப்புப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சிறிதரன், வினோநோகராதலிங்கள்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள், ஜனநாயக மக்கள் முன்னனியின் தலைவர் மனோகனேசன் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பாஸ்கரா மற்றும் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தண்ணீரில்லா நடுக் காட்டுக்குள் கேப்பாபிலவு மக்கள் பரிதவிப்பு; என்ன செய்வதென்று தெரியாமல் கண்ணீர் விடுகின்றனர்!

இருக்க இடமோ குடிக்கத் தண்ணீரோ உண்ண உணவோ இல்லாமல் நந்திக் கடலேரியை அண்டிய காட்டுப் பகுதிக்குள் கேப்பாபிலவு மக்கள் நேற்று மாலை  அநாதைகளாக இறக்கிவிடப்பட்டனர்.

நேற்றுமுன்தினம் செட்டிக்குளம் முகாமைத் திடீர் என மூடிய இராணுவத்தினர் அங்கிருந்த இந்த மக்களை அப்புறப்படுத்தினர். இங்கிருந்த 360 குடும்பங்களில்  கேப்பாபிலவு பகுதியைச் சேர்ந்த 110 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள்  நேற்றுமுன்தினம் வற்றாப்பளை மகாவித்தியாலயத்தில் இறக்கி விடப்பட்டனர். அவர்களுக்கு உணவு மட்டும் வழங்கப்பட்டது.

ஆயினும் அந்த இடத்தில் இருந்து நேற்று மீண்டும் ஏற்றிச் செல்லப்பட்ட மக்கள்  நேற்று மாலை நந்திக் கடலேரிக் கரையோரத்தில் உள்ள சூரியபுரம் காட்டுப்பகுதியில்  எவ்வித வசதிகளோ, பாதுகாப்போ எதுவுமின்றி இறக்கிவிடப்பட்டுள்ளதாக அந்த மக்கள்  உதயனிடம் கண்ணீர் மல்கத்  தெரிவித்தனர்.

இது தொடர்பாக அப்பகுதியிலுள்ள ஒருவர் தெரிவிக்கையில் நாங்கள் இங்கு தங்குவதற்கு கூடாரமோ அல்லது மழைக்கு ஒதுங்குவதற்கு கட்டடமோ இல்லை  காட்டுக்குள் எந்தப் பகுதியால் யானைகள், கொடிய மிருகங்கள் வரும் என்று  உயிரைக் கையில் பிடித்தவாறு இரவைக்கழிக்கின்றோம் என்று கூறினார்.

இந்த மக்களுக்கு நேற்று இரவுவரை உடனடி உணவுப் பொருள்கள் எதுவும் வழங்காததால் அவர்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

கேப்பாபிலவு மக்களுக்கு உடனடி தீர்வு வழங்குக; இலங்கை அரசிடம் வலியுறுத்தியது ஐ.நா.!

சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் நிர்க்கதியாகி உள்ள கேப்பாபிலவு மக்கள் குறித்து உடன் கவனம் செலுத்தி அவர்களுக்கான தீர்வை வழங்குமாறு அரசிடம் கோரியிருக்கிறது

“மனிக் பாம்’ முகாம் மூடப்பட்டமையானது இலங்கை வரலாற்றில் ஒரு மைல்கல்லாகக் கணிக்கப்படுகிறது. எனினும், இன்னும் பலர் தங்களது சொந்த இடங்களுக்குச் செல்லமுடியாத நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர். இதற்கான உடனடித் தீர்வொன்று கண்டுபிடிக்கப்படவேண்டும் என்றும் ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கான “மனிக்பாம்’ முகாமை மூடியதை வரவேற்கும் ஐக்கிய நாடுகள் சபை, யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களைப்பற்றிய அக்கறையையும் வெளிப்படுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான மனிதாபிமான இணைப்பாளர் சுபினாய் நந்தி, வன்னியில் இடம்பெயர்ந்தவர்களில் 346 பேர் இன்னும் தங்களது சொந்த இடங்களான கேப்பாபிலவு, மந்துவில் ஆகிய பகுதிகளில் செல்லமுடியாத நிலையில் உள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், “மனிக் பாம்’ முகாம் மூடப்பட்டமையானது இலங்கை வரலாற்றில் ஒரு மைல்கல்லாகக் கணிக்கப்படுகிறது. எனினும், இன்னும் பலர் தங்களது சொந்த இடங்களுக்குச் செல்லமுடியாத நிர்க்கதிக்கு ஆளாகியுள்ளனர்.

இதற்கான உடனடித் தீர்வொன்று கண்டுபிடிக்கப்படவேண்டும்” என அவர் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “மனிக் பாம்’ முகாமிலிருந்து வடபகுதியின் முல்லைத்தீவுப் பிரதேசத்தைச் சேர்ந்த 346 பேர் (110 குடும்பங்கள்) வெளியேறியுள்ள போதிலும், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அவர்களது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்லமுடியாத நிலையில் உள்ளனர்.

அதற்குப் பதிலாக அவர்கள் அரச காணிகளில் குடியேற்றப்பட்டுள்ளனர். தங்களது சொந்த இடங்களுக்குச் செல்லமுடியுமா அல்லது அவ்வாறு செல்லமுடியாத பட்சத்தில்  தங்களுக்கு உரிய நட்டஈடுகள் கிடைக்குமா என்ற அங்கலாய்ப்புடன் உள்ள அவர்களுக்கு எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாகியுள்ளது.

யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்காகக் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ள தீர்வுகளை இலங்கை அரசு வழங்கவேண்டும் என நந்தி மேலும் தெரிவித்தார்.

“இடம்பெயர்ந்த மக்கள் இலங்கையில் எந்தப் பாகத்திலும் குடியேற அனுமதிக்கப்படலாம். எனினும், தங்கள் சொந்த இடங்களைவிட்டு வேறு இடங்களில்  குடியேற்றப்படுபவர்களுக்கு அவர்கள் குடியேறும் காணிகளின் சட்டபூர்வமான உரித்துடைமை வழங்கப்படவேண்டும் என்பதே நல்லிணக்க செயற்பாட்டின் பிரதான அம்சமாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!