Home Blog Page 104

இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக யாழ் போதனா வைத்தியசாலையில் நினைவுத்தூபி !

இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக விரைவில் நினைவுத்தூபி அமைக்கப்படும் என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது இந்த நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”இந்திய ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின்  உறவுகளால்  உயிரிழந்தோரின் நினைவாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தில் ஒரு தூபி அமைப்பதற்கு தமக்கு இடம் ஒதுக்கித் தருமாறு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துள்ளதாகவும்அந்த விடயம் தொடர்பில் தமது வைத்தியசாலையின்  பல்வேறுபட்ட குழுக்களின்  ஒப்புதலைப் பெற்ற பின்னர் புதிய வசதி ஒன்று செய்யப்பட்டு  ஒரு பொருத்தமான இடம் தெரிவு செய்யப்பட்டு நினைவுத்தூபி அமைக்கப்படும்என்றார்.

மேலும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கருத்துரைக்கும் போது யாழ்ப்பாண வைத்தியசாலையின செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியுள்ளனதற்போது வைத்தியசாலையை நோக்கி பல்வேறு நோய் உடையவர்களும் பிரச்சினை உடையவர்களும் சிகிச்சைக்காக வந்த வண்ணம் இருக்கின்றார்கள் கொவிட்  தாக்கம் குறைவடைந்த நிலையில் காணப்படுகின்றது இருப்பினும் கோவிட்  சிகிச்சைக்கான அதி தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் மூன்று விடுதிகள் இயங்கிய வண்ணம் உள்ளனகொவிட்  தொற்றுக்கு உள்ளானவர்களுக்கான சிகிச்சை வசதிகள் தற்போதும் தொடர்ந்த வண்ணம் உள்ளதுஆகவே பொதுமக்கள் அவர்களுக்கு கடுமையான வருத்தங்கள் ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் அவர்கள் வைத்தியசாலைகளை நாடவேண்டும் அருகிலுள்ள வைத்தியசாலைகள் அல்லது போதனா வைத்திய சாலைக்கு வந்து தங்களுடைய வருத்தங்கள் சம்பந்தமாக ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இதேவேளை  அனைவரும்   தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள வேண்டும் தடுப்பூசியினை பெறாத நிலையில் அவர்களுக்கு ஏதாவது சிகிச்சைகளுக்கு ஏதாவது வைத்திய தேவைக்காக வர  வேண்டுமாக இருந்தால் அவர்கள் வரமுடியும் தடுப்பூசி போடாதவர்கள் என்ற ரீதியில் அவர்களை நாங்கள் பிரித்து பார்ப்பதில்லை அவர்களுக்கும் ஏனையவர்கள் போன்று சகல விதமான சிகிச்சைகளை மேற் கொள்ளப்படுகின்றதுகுறிப்பாக வயோதிபர்கள் இளம் வயதினர் சிலர் தமக்கு விருப்பமான தடுப்பூசியைப் போட வேண்டும் என்ற நோக்கில் தாமதப்படுத்தி தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளாது விடாது தமக்குரிய தடுப்பூசியினை விரைவில் பெற்றுக் கொள்ள வேண்டும்” என்றார்.

அதிபர், ஆசிரியர்களுக்கு ஆளுநர் விடுத்துள்ள எச்சரிக்கை!

21 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமான பிறகு வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் நவம்பர் மாத சம்பளம் நிறுத்தப்படும் என்று வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரே தெரிவித்துள்ளார்.

அதேபோல், 25 ஆம் திகதியன்று யாராவது வந்தால், அவர்கள் பாடசாலைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அவர் தெரிவித்தார்.  சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு கோரி, இணைய கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகி ஆசிரியர் அதிபர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தத்தின் 100 வது நாள் இன்று.

இந்தப் பின்னணியில், ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாடுக்கு எதிரான தேசியக் கூட்டமைப்பு கல்விச் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவை நேற்று (18) சந்தித்து கடிதம் ஒன்றை கையளித்து இருந்தனர். சம்பளப் பிரச்சினை தீரும் வரை தமது தொழிற்சங்கங்களின் ஆசிரியர் அதிபர்கள் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளுக்கு செல்லமாட்டார்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், எதிர்வரும் நேற்று 25 ஆம் திகதி முதல் கற்பித்தல் நடவடிக்கைகளைத் தொடங்க ஆசிரியர் அதிபர்கள் தொழிற்சங்க கூட்டணி முடிவு செய்தமை குறிப்பிடத்தக்கது

யாழில் சிறுமி வன்புணர்வு சம்பவம் – ஒளிப்படப்பிடிப்பாளரின் மனைவியும் கைது!

13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் கொக்குவில் உள்ள ஒளிப்படப்பிடிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவியும் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் ஒளிப்படங்களை வெளியிட்டு சிறுமியை பிழையானவராக வெளிப்படுத்த முற்பட்ட வேளை அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் துரித நடவடிக்கையின் காரணமாக இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றதுடன் மற்றொருவரும் கைது செய்யப்படவுள்ளார் என்று அறிய முடிகிறது.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குவிலில் 13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் கொக்குவிலில் ஒளிப்படப்பிடிப்பு (ஸ்ருடியோ) நடத்துபவர் கடந்தவாரம் கைது செய்யப்பட்டார்.

அவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஒன்றரை வருடங்களாக உறவினரான சந்தேக நபர் பல தடவைகள் தன்னை வன்புணர்ந்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமி சட்ட மருத்துவ வல்லுநரின் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சந்தேக நபரின் சிறுமியின் ஒளிப்படங்கள் சில சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு வழக்கு நடவடிக்கைகள் சந்தேக நபருக்கு சாதகமாக  மாற்றப்படவுள்ளமைதொடர்பில் கண்டறிந்தனர்.

அந்த ஒளிப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடலாம் என்ற அடிப்படையில் அவற்றை வைத்திருந்தவர்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதுதொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். அதனடிப்படையில் சந்தேக நபரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் மற்றொருவரிடம் விசாரணைகளை முன்னெடுத்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

பிரித்தானியாவின் மக்நிட்ஸ்கை தடைகளுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவில் சவேந்திர சில்வா மீதான தடை ஆராயப்படும்

– ஜெனெட் டாபி MP உத்தரவாதம்

சவேந்திர சில்வா உட்பட்ட இலங்கை போர்க்குற்றவாளிகளை பிரித்தானியா தடை செய்வது தொடர்பான மற்றுமொரு இராஜதந்திர சந்திப்பு ஒன்று, லூசியம் கிழக்கு  பிராந்தியத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்நிட்ஸ்கை தடைகளுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் (APPG for Magnitsky Sanctions) உப தலைவருமான  மதிப்பிற்குரிய ஜெனட் டாபி (Hon Janet Daby) அவர்களுடன் இன்று திங்கள் கிழமை (18/10/2021) இடம்பெற்றது. 

மனித உரிமை செயட்பாட்டாளரும் சட்ட ஆலோசகருமான கீத் குலசேகரம் தலைமையில் நடைபெற்ற இந்த முக்கிய சந்திப்பில் ITJP அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் கரிசன் (Frances Harrison), மற்றும் தெழில்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் (Tamils For Labour) அமைப்பின் தலைவர் திரு சென் கந்தையா ஆகியோர் விசேட பேச்சாளர்களாக கலந்து கொண்டனர். 

இச் சந்திப்பின் போது யுத்தகுற்றவாளியான  ஜெனரல் ஷவேந்திர சில்வா உள்ளிட்ட இலங்கை போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவில் தடைசெய்யவது பற்றி எதிர்வரும் 21 ஒக்டோபர் 2021 அன்று இடம்பெறவுள்ள, மக்நிட்ஸ்கை தடைகளுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் (APPG for Magnitsky Sanctions) முதலாவது கூட்டத்தில் கலந்துரையாடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் சார்பில் கீத் குலசேகரம் அவர்கள் முன்வைத்தார். பிரான்சிஸ் கரிசன் அவர்கள் தனது உரையின் போது  ITJP யினால் சமர்ப்பிக்கப்பட்ட சவேந்திர சில்வா தொடர்பான 50 பக்க குற்றப்பத்திரிகை பற்றியும், தற்போது தொடரும் சித்திரவதை பற்றியும் எடுத்துக்கூறி, சவேந்திர சில்வாவை தடை செய்வது ஒரு எடுத்துக்காட்டாக அமையும் என்று தெரிவித்தார். 

சென் கந்தையா அவர்களின் உரையில் பிரித்தானிய பாராளுமற்றில் இதுதொடர்பான விவாதம் ஒன்றை ஏற்பாடு செய்வது பற்றியும் அதற்கான உதவியையும் கோரியிருந்தார். இலங்கையில் சவேந்திர சில்வாவின் கட்டளையின் கீழ் இயங்கும் இராணுவத்தினர் மற்றும் பொலிசாரால் மிக அண்மையில் சித்திரவதைக்கு உள்ளாகி தப்பிவந்தவர்கள் சார்பில் சதேந்லொயிற்றன் புயலேந்திரன் மற்றும் வசிகரன் சதாசிவம் ஆகியோர் தமது அனுபவங்களை பகிர்ந்து, இலங்கையில் சித்திரவதைகள் தொடர்வதை உறுதிசெய்ததுடன், அதனை நிறுத்த பிரித்தானியா உடன் நடவடிக்கை எடுத்து, சவேந்திர சில்வா போன்றவர்களை தடை செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். 

மதிப்பிற்குரிய ஜெனட் டாபி அவர்கள் அனைந்துகருத்துக்களை உள்வாங்கியதுடன், புதிதாக உருவாகியுள்ள மக்நிட்ஸ்கை தடைகளுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவில் (APPG for Magnitsky Sanctions) இதனை ஆராய்வதாகவும், தமிழ் மக்கள் சார்பாக பிரித்தானிய உள்துறை அமைச்சகத்துக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

அத்துடன்பாராளுமன்றத்தில் தமிழர்கள் பிரச்சனையை விவாதிக்க அனுமதி பெற ஏற்பாடுகள் செய்வதாகவும் வாக்களித்தார். அத்துடன் தான் வெளியுறவு அலுவலகத்திற்கு கடிதம் எழுதி பாதிக்கப்பட்டவர்களுடன் ஒரு சந்திப்பைக் கேட்பதாகவும், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அனுபவித்த சித்திரவதைகள், கடத்தல்கள் மற்றும் துன்பங்களைப் பற்றி வெளியுறவு அலுவலகம் நேரடியாக கேட்டு அறியக்கூடிதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும், பிரித்தானியா வாழ் தமிழர் சார்பாக பிரித்தானிய பாராளமன்றத்தில் அனைத்துக் கட்சிகளையும் உள்வாங்கி அமைக்கப்பட்டுள்ள All-Party Parliamentary Group for Tamils (APPGT) இல் தன்னை இணைத்துக் கொள்ளவும் சம்மதித்துள்ளார். அவர் மேலும் தமிழர்கள் சித்திரவதைக்கு உள்ளாகுபடுவதை ஐக்கிய இராச்சியத்தின் முக்கியமான ஊடகங்கங்களின் மூலம் விழிப்புணர்வு ஏட்படுவதட்கு வழிவகுப்பதாகவும் உறுதியளித்துள்ளார். 

இது இளையோராகிய எமது முயற்ச்சிக்குக் கிடைத்த ஒரு சிறு வெற்றியாகும் என்றும் இவ்வாறான சிறு படிகள் எமக்கு ஊக்கத்தையும்நம்பிக்கையையும் தருகின்றன என்றும் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்த  முதன்மை செயற்பாட்டாளரான திரு. விஜய் விவேகானந்தன் அவர்கள் தெரிவித்தார். அவரின் ஒருங்கிணைப்பில், கோவிட் காரணமாக மெய்நிகர் வழி (zoom) வழியாக இடம்பெற்ற இச் சந்திப்பில் விதுரா விவேகானந்தன், றஜூவன் பவளகாந்தன், சதேந்லொயிற்றன் புயலேந்திரன், கிறிஸ்டி நிலானி காண்டீபன், சுபதர்ஷ வரதராஜா, சுபமகிசா வரதராஜா, ரஜூவன் ரவிக்குமார் மற்றும் வசிதரன் சதாசிவம் ஆகியோர் கலந்துகொண்டனர்.இவ்வாறன தொடர் சந்திப்புக்களை மேற்கொண்டுவரும் பிரித்தானிய இளையோரின் விடா முயற்சியால் இதுவரை 31 பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் 18 மே 2021 பிரித்தானியாவில் கொண்டுவரப்பட்ட முன்பிரேரணையில் (Early Day Motion 64) கையெழுத்திட்டுள்ளமை குறிப்படத்தக்கது.

சவேந்திர சில்வாவை தடைசெய்ய கோரி பிரித்தானியாவில் தொடரும் இராஜதந்திர சந்திப்புக்கள்

இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடை செய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, பிரித்தானியாவில் மற்றுமொரு உயர்மட்ட இராஜதந்திர சந்திப்பு ஒன்று இன்று (15/10/2021) மதியம் நடைபெற்றுள்ளது.

பிரித்தானியாவின் கரோ மத்திய (Harrow Central) பிராந்தியத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான மதிப்பிற்குரிய ஹரத் தோமஸ் (Hon. Gareth Thomas MP) அவர்களுடனேயே இந்த சந்திப்பு மெய்நிகர்வழி (Zoom) ஊடக இடம்பெற்றுள்ளது. சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளுமான திரு கீத் குலசேகரம் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த முக்கிய சந்திப்பில் ஐ.நா. நிபுணரான யஸ்மின் சூக்கா தலைமையிலான சர்வதேச உண்மை மற்றும் நீதித்திட்டத்தின் (ITJP) இயக்குனரான பிரான்சிஸ் கரிசன் (Francis Harrison), இனப்படுகொலையை சர்வதேச நீதிமன்றிற்கு (ICC) எடுத்துச்செல்லும் வழக்கினை முன்னெடுத்துவரும் மூத்த வழக்கறிஞர் திரு அருண் கணநாதன், தொழில்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் (Tamils for Labour) பணிப்பாளர் திரு சென் கந்தையா அவர்கள் மற்றும் நாடுகடந்த அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினராகிய திரு சொக்கலிங்கம் யோகலிங்கம் அவர்கள் கலந்துகொண்டு கருத்துக்களை பரிமாறினர்.

கீத் குலசேகரம் அவர்கள் தனது தலைமை உரையின் போது, இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பல்லாயிரம் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான 58 ஆவது படைப்பிரிவிற்கு தலைமை தாங்கி இராணுவத்தை நேரடியாக வழி நடத்திய சவேந்திர சில்வாவினை தடை செய்ய போதுமான ஆதாரங்களை ஏற்கனவே ITJP சமர்ப்பித்திருந்த போதும், பிரித்தானிய வெளிவிவகார அமைப்பு இன்னும் உரிய நடவடிக்கை எடுக்க தவறியிருப்பதால், அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டிய தருணம் வந்துள்ளதை சுட்டிக்காட்டினார். அத்துடன் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் மட்டுமன்றி, தற்போது இலங்கையில் தொடரும் ஆள் கடத்தல் மற்றும் சித்திரவதைகளும் சவேந்திர சில்வாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுத படைகளே மேற்கொண்டுவருவதால் அதற்கும் சவேந்திர சில்வாவே பொறுப்பு என்றும், சந்திப்பில் கலந்துகொண்ட சித்திரவதைக்குள்ளானவர்கள் இதற்கு நேரடி சாட்சி என்றும் தெரிவித்தார்.

பிரான்சிஸ் கரிசன் அவர்கள் இலங்கையில் தொடரும் சித்திரவதையை தாங்கள் ஆவணப்படுத்தியுள்ளதோடு, ஏனைய யுத்த குற்றவாளிகளுக்கு எதிராக ஆவணலகளை தயார்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். எதிர்வரும் 20 October 2021 ஆரம்பிக்கப்படவுள்ள மக்கன்ஸ்கை தடைகளுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவில் இணையும் படியும் கேட்டுக்கொண்டார். அருண் கணநாதன் மற்றும் சென் கந்தையா அவர்கள் சவேந்திர சில்வாவை தடைசெய்வது பற்றி ஒரு விவாதத்தை பிரித்தானிய பாராளுமன்றில் கொண்டுவர ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும், அதற்கு ஆதரவு தரும்படியும் கேட்டுக்கொண்டனர்.

மேற்படி சந்திப்பில் சித்திரவதையில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களும்  மற்றும் நாடுகடந்த அரசின் செயற்பாட்டாளர்களுமான பொன்னையா யோகராஜா, சதீஷ் குலசேகரம், ஶ்ரீ அபிராமி ஶ்ரீ பாலேஸ்வரன், அரவிந்தராஐ் நல்லதம்பி, வசிதரன் சதாசிவம், கௌசிகன் சசிகுமார், ஜனுஷ்டன் நவரத்தினம், ஜனகன் கணேஷ், றஜூவன் பவளகாந்தன், ரஞ்சினி யோகராஜா,சாதந்லோயிற்றன் புயலேந்திரன் மற்றும் குமார்சஞ்சிக்குமார் ஆகியோரும் கலந்து கொண்டு தங்கள் சித்திரவதை அனுபவர்களை பாராளுமன்ற உறுப்பினருடன்பகிர்ந்து கொண்டு, பிரித்தானியா தமிழருக்கு  நியாயம் பெற்றுத்தரும் முயற்சியில் தமது உண்மையான ஈடுபாட்டு நிரூபிக்கஇந்த சிறிய ஆனால் முக்கிய படி உதவும் என்று கேட்டுக்கொண்டார்கள்.

அனைவரின் கருத்துக்களையும் உள்வாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர், தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியதுடன், தமிழ் மக்கள் சார்பாக பிரித்தானிய உள்துறை அமைச்சகத்துக்கு அழுத்தம் கொடுப்பதாக உறுதியளித்துள்ளார்.அதேவேளை, அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்கட்சியின் மற்றய பாராளுமன்ற உறுப்பினர்களான சிவேன் மக்டோனாமற்றும் ஏனையவர்க்ளுடன் மேலும் இது தொடர்பில் கலந்துரையாடி குறித்த விடயத்தினை பாராளுமன்ற விவாதத்திற்கு அனுமதி பெற முயற்சிகளை எடுப்பதாகவும் கூறியுள்ளார்.

சவேந்திர சில்வாவை தடைசெய்யும் முயற்சிக்கு சர்வதேச ஆதரவை திரட்டும் நோக்கில் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த தமிழ் இளையோர் இணைய வழி கையெழுத்து போராட்டம் ஒன்றை ஆரம்பித்ததுடன் அனைத்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் தொடர்பு கொண்டு தொடர் சந்திப்புக்களை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

21 ஆம் திகதிவரை மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீடிப்பு!

நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை, இம்மாதம் 21ஆம் திகதிவரை (வியாழக்கிழமை) கடுமையாகக் கடைபிடிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

இம்மாதம் 19 மற்றும் 20 ஆம் திகதிகள் விடுமுறை தினங்களாக அமையப்பெற்று நீண்ட விடுமுறையுடன் கூடிய வார இறுதி அமையப்பெறவுள்ளமையால், அனைத்து மாகாண எல்லைகளிலும் போக்குவரத்து நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புத் துறையினருக்குப் பணிப்புரை விடுத்தார்.

இன்று, வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற கொரோனா ஒழிப்புச் செயலணிக் கூட்டத்தின் போதே, ஜனாதிபதி இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.

தமிழ் இளைஞர்களுக்கு புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல்

கனடிய உயர்ஸ்தானிகரிடத்தில் சிறீதரன் எம்.பி தெரிவிப்பு

தமிழ் இளைஞர்கள் புலனாய்வு அச்சுறுத்தலால் நாட்டைவிட்டு வெளியேற எத்தனிக்கின்றார்களென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினனிடம் தெரிவித்தார்.

இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிர் டேவிட் மெக்கினன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று(14) அவரது கிளிநொச்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.

கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கொண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கனேடிய உயர்ஸ்தானிகருடனான இந்த கலந்துரையாடல் ஆரோக்கியமாக இருந்தது. இதன்போது தற்போது இருக்கும் அரசாங்கம் தமிழர்களை அரச இயந்திரத்தால் நசுக்கப்படுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது என்றும்,

தமிழர்கள் தமது உணர்வுபூர்வமான நினைவுகளை மேற்கொள்வதற்கு இப்போது இருக்கும் அரசாங்கம் கொரோனாவை சாட்டு வைத்து தடைகள் விதிப்பது தொடர்பாகவும் அதனை மீறி நினைவேந்தல்கள் இடம்பெற்றால் புலனாய்வாளர்கள் மூலமாக நினைவேந்தலில் கலந்து கொண்டவர்களை அச்சுறுத்துவது தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டதுடன் இதேவேளை அரசாங்கம் பாரிய விழாக்களை எந்தவித தடைகளும் இன்றி நடாத்துவதும் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலாலும் தமிழ் இளைஞர்களிற்கு வேலைவாய்ப்பு கொடுப்பதில் உள்ள பின்னடைவாலும் இலங்கையில் வட பகுதியில் உள்ள தமிழ் இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன் தொல்பொருள் என்ற போர்வையில் தமிழர்களின் பூர்விக நிலங்கள் அபகரிக்கப்படுவது தொடர்பாகவும் தமிழர்களின் பூர்விக அடையாளங்களை அழித்து பௌத்த சிங்கள அடையாளங்களை திணிப்பது தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

பருத்தித்துறை கடலில் இந்திய மீனவர்களுடன் மோதல்

யாழ்.பருத்தித்துறை கடற்பகுதிக்குள் நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களுக்கும் பருத்தித்துறை மீனவர்களுக்குமிடையில் இன்று காலை இடம்பெற்ற மோதலில் 3 மீனவர்கள் காயமடைந்துள்ளனர்.

இன்று முற்பகல் 11 மணியளவில் மீன்பிடி நடவடிக்கைக்காக பருத்தித்துறை மீனவர்கள் படகுகளில் சென்றிருக்கின்றனர். இதன்போது வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் இந்திய மீன்பிடி படகுகள் காணப்பட்டிருக்கின்றன.

அதேவேளை பருத்தித்துறை மீனவர்களின் வலைகளும் இந்திய றோலர் படகுகளால் அறுக்கப்பட்டிருக்கின்றன. சம்பவத்தை அடுத்து இரு தரப்புக்கும் இடையில் கை கலப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்போது இந்திய மீனவர்கள் கூரிய ஆயுதங்கள் மற்றும் கற்களால் தாக்குதல் நடத்தியதாகவும் சம்பவத்தின்போது முனை பகுதியைச் சேர்ந்த தீபன், சுரேஸ்குமார், ரவிக்குமார் ஆகிய மீனவர்கள் சிறிய காயங்களுக்கு உள்ளானதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.இந்திய மீனவர்கள் தாக்குதலுக்கு தயாராக கற்கள் உட்பட்ட பொருட்களை எடுத்துவந்திருந்தாகவும் பருத்தித்துறை மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

மோதல் தீவிரமடைந்த நிலையில் இலங்கை கடற்படையினர் அங்கு சென்றபோது இந்திய மீனவர்கள் தப்பி ஓடிவிட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த பருத்தித்துறை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

சப்பாத்துக் காலுடன் சந்நிதி ஆலயத்திற்குள் நுழைந்த பொலிஸ் அதிகாரி!

வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார், தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயங்களுக்குள் சப்பாத்துடன் சென்ற பொலிஸ் அதிகாரி தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் கொட்டாச்சி என்பவரே இவ்வாறு மத நியதிகளை மீறி ஆலயங்களுக்குள் சப்பாத்துடன் சென்றுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று (புதன்கிழமை) நண்பகல்  விஜயம் செய்த பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார், தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் ஆலய வெளி வீதியில் சப்பாத்துக்களை கழற்றிவிட்டு ஆலயங்களுக்குள் சென்று வழிபாடுகளை முன்னெடுத்த நிலையில் காங்கேசன்துறை மூத்த பொலிஸ் அத்தியட்சகர் சப்பாத்துக்களை கழற்றாது ஆலயங்களுக்குள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்.மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி; முன்பதிவை மேற்கொள்ள அழைப்பு

யாழ்.மாவட்டத்தில் 432 பேருக்கு பைசர் தடுப்பூசி வழங்கப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்திலுள்ள விசேட தேவையுடையோர், மற்றும் நீண்ட நாள் நோய் வாய்ப்பட்டோருக்காக வழங்கப்படும் பைசர் தடுப்பூசி சுமார் 432 பேர் வரை வழங்கப்பட்டுள்ளது.  அரசாங்கத்தினால் அறிவுறுத்தப்பட்ட விசேட தேவையுடையோர் மற்றும் நீண்ட நாள் நோய்களுக்கு உள்ளவர்களுக்கான தடுப்பூசிகள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

அடுத்த கட்டமாக பாடசாலை மாணவர்களுக்கான பைசர் தடுப்பூசிகள் வழங்கும் ஏற்பாடுகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகின்றார்கள்.  ஆகவே தடுப்பூசிகளை இதுவரை பெறாதோர் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலையில் முன்பதிவு செய்து வைத்திய ஆலோசனையுடன் பெற்றுக் கொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஆர்ப்பாட்டம்!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (புதன்கிழமை)  கவனயீர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா பிரதான தபால் அலுவலகத்திற்கு அருகாமையில் காணாமல் போனவர்களின் உறவுகளினால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தின்  1700 வது நாளான இன்று குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன் போது காணாமல் போனோரின் உறவுகளினால் அமெரிக்க, ஐரோப்பிய கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டித்தமை குறிப்பிடத்தக்கது.

ஆண்டு இறுதிக்குள் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் – இரா.சம்பந்தன்

தமிழ் மக்களின் இறையாண்மையின் அடிப்படையில் அவர்கள் ஆட்சி அதிகாரங்களை பயன்படுத்திக்கொள்கின்ற வகையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொடுக்கக் கூடிய வகையில், தமது ஜனநாயக உரிமைகளுக்கு முறையான அங்கீகாரம் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழர்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே எந்தவித தாமதமும் இல்லாது சகல மக்களின் உரிமைகளையும் உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பை விரைவாக உருவாக்க வேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கை என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மக்களுக்கு உறுதியளித்தமை பிரகாரம் அடுத்த ஆண்டுக்குள் புதிய அரசியல் அமைப்பு மற்றும் தேர்தல் முறைமை உருவாக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராணுவத்தின் 72ஆவது ஆண்டு நிறைவு விழாவில் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியின் வாக்குறுதிகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு என கூறினார்.

தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைகளை ஆட்சியாளர்கள் பொருட்படுத்தாமை மற்றும் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நினைக்காதமையே கடந்த முப்பது ஆண்டுகால யுத்ததிற்கு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் நாட்டில் முறையான அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் மாத்திரமே அபிவிருத்தியும் முன்னேற்றமும் நாட்டில் அமைதியும் ஏற்படும் என்றும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

error: Content is protected !!