SHARE

– ஜெனெட் டாபி MP உத்தரவாதம்

சவேந்திர சில்வா உட்பட்ட இலங்கை போர்க்குற்றவாளிகளை பிரித்தானியா தடை செய்வது தொடர்பான மற்றுமொரு இராஜதந்திர சந்திப்பு ஒன்று, லூசியம் கிழக்கு  பிராந்தியத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்நிட்ஸ்கை தடைகளுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் (APPG for Magnitsky Sanctions) உப தலைவருமான  மதிப்பிற்குரிய ஜெனட் டாபி (Hon Janet Daby) அவர்களுடன் இன்று திங்கள் கிழமை (18/10/2021) இடம்பெற்றது. 

மனித உரிமை செயட்பாட்டாளரும் சட்ட ஆலோசகருமான கீத் குலசேகரம் தலைமையில் நடைபெற்ற இந்த முக்கிய சந்திப்பில் ITJP அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் கரிசன் (Frances Harrison), மற்றும் தெழில்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் (Tamils For Labour) அமைப்பின் தலைவர் திரு சென் கந்தையா ஆகியோர் விசேட பேச்சாளர்களாக கலந்து கொண்டனர். 

இச் சந்திப்பின் போது யுத்தகுற்றவாளியான  ஜெனரல் ஷவேந்திர சில்வா உள்ளிட்ட இலங்கை போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவில் தடைசெய்யவது பற்றி எதிர்வரும் 21 ஒக்டோபர் 2021 அன்று இடம்பெறவுள்ள, மக்நிட்ஸ்கை தடைகளுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் (APPG for Magnitsky Sanctions) முதலாவது கூட்டத்தில் கலந்துரையாடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் சார்பில் கீத் குலசேகரம் அவர்கள் முன்வைத்தார். பிரான்சிஸ் கரிசன் அவர்கள் தனது உரையின் போது  ITJP யினால் சமர்ப்பிக்கப்பட்ட சவேந்திர சில்வா தொடர்பான 50 பக்க குற்றப்பத்திரிகை பற்றியும், தற்போது தொடரும் சித்திரவதை பற்றியும் எடுத்துக்கூறி, சவேந்திர சில்வாவை தடை செய்வது ஒரு எடுத்துக்காட்டாக அமையும் என்று தெரிவித்தார். 

சென் கந்தையா அவர்களின் உரையில் பிரித்தானிய பாராளுமற்றில் இதுதொடர்பான விவாதம் ஒன்றை ஏற்பாடு செய்வது பற்றியும் அதற்கான உதவியையும் கோரியிருந்தார். இலங்கையில் சவேந்திர சில்வாவின் கட்டளையின் கீழ் இயங்கும் இராணுவத்தினர் மற்றும் பொலிசாரால் மிக அண்மையில் சித்திரவதைக்கு உள்ளாகி தப்பிவந்தவர்கள் சார்பில் சதேந்லொயிற்றன் புயலேந்திரன் மற்றும் வசிகரன் சதாசிவம் ஆகியோர் தமது அனுபவங்களை பகிர்ந்து, இலங்கையில் சித்திரவதைகள் தொடர்வதை உறுதிசெய்ததுடன், அதனை நிறுத்த பிரித்தானியா உடன் நடவடிக்கை எடுத்து, சவேந்திர சில்வா போன்றவர்களை தடை செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். 

மதிப்பிற்குரிய ஜெனட் டாபி அவர்கள் அனைந்துகருத்துக்களை உள்வாங்கியதுடன், புதிதாக உருவாகியுள்ள மக்நிட்ஸ்கை தடைகளுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவில் (APPG for Magnitsky Sanctions) இதனை ஆராய்வதாகவும், தமிழ் மக்கள் சார்பாக பிரித்தானிய உள்துறை அமைச்சகத்துக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

அத்துடன்பாராளுமன்றத்தில் தமிழர்கள் பிரச்சனையை விவாதிக்க அனுமதி பெற ஏற்பாடுகள் செய்வதாகவும் வாக்களித்தார். அத்துடன் தான் வெளியுறவு அலுவலகத்திற்கு கடிதம் எழுதி பாதிக்கப்பட்டவர்களுடன் ஒரு சந்திப்பைக் கேட்பதாகவும், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அனுபவித்த சித்திரவதைகள், கடத்தல்கள் மற்றும் துன்பங்களைப் பற்றி வெளியுறவு அலுவலகம் நேரடியாக கேட்டு அறியக்கூடிதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும், பிரித்தானியா வாழ் தமிழர் சார்பாக பிரித்தானிய பாராளமன்றத்தில் அனைத்துக் கட்சிகளையும் உள்வாங்கி அமைக்கப்பட்டுள்ள All-Party Parliamentary Group for Tamils (APPGT) இல் தன்னை இணைத்துக் கொள்ளவும் சம்மதித்துள்ளார். அவர் மேலும் தமிழர்கள் சித்திரவதைக்கு உள்ளாகுபடுவதை ஐக்கிய இராச்சியத்தின் முக்கியமான ஊடகங்கங்களின் மூலம் விழிப்புணர்வு ஏட்படுவதட்கு வழிவகுப்பதாகவும் உறுதியளித்துள்ளார். 

இது இளையோராகிய எமது முயற்ச்சிக்குக் கிடைத்த ஒரு சிறு வெற்றியாகும் என்றும் இவ்வாறான சிறு படிகள் எமக்கு ஊக்கத்தையும்நம்பிக்கையையும் தருகின்றன என்றும் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்த  முதன்மை செயற்பாட்டாளரான திரு. விஜய் விவேகானந்தன் அவர்கள் தெரிவித்தார். அவரின் ஒருங்கிணைப்பில், கோவிட் காரணமாக மெய்நிகர் வழி (zoom) வழியாக இடம்பெற்ற இச் சந்திப்பில் விதுரா விவேகானந்தன், றஜூவன் பவளகாந்தன், சதேந்லொயிற்றன் புயலேந்திரன், கிறிஸ்டி நிலானி காண்டீபன், சுபதர்ஷ வரதராஜா, சுபமகிசா வரதராஜா, ரஜூவன் ரவிக்குமார் மற்றும் வசிதரன் சதாசிவம் ஆகியோர் கலந்துகொண்டனர்.இவ்வாறன தொடர் சந்திப்புக்களை மேற்கொண்டுவரும் பிரித்தானிய இளையோரின் விடா முயற்சியால் இதுவரை 31 பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் 18 மே 2021 பிரித்தானியாவில் கொண்டுவரப்பட்ட முன்பிரேரணையில் (Early Day Motion 64) கையெழுத்திட்டுள்ளமை குறிப்படத்தக்கது.

Print Friendly, PDF & Email