SHARE
image_pdfPRINT

வவுனியா பன்றிக்கெய்த குளம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் நால்வர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.

புகையிரதம் வரும் வேளை காரில் கடவையை கடக்க முற்பட்ட போதே குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதன் போது காரில் பயணித்தவர்களில் நால்வர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தானர். இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.