இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் கடந்த 28 வருடகாலமாக இருந்த மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம் உள்ளிட்ட சில பகுதிகள் இராணுவத்தினரால் இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டு உள்ளது.
யாழுக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா குறித்த பாடசாலையை மிக விரைவில் மீள கையளிக்க நடவடிக்கை எடுப்பேன் என உறுதி அளித்திருந்தார்.
அதன் பிரகாரம், இன்றைய தினம் வியாழக்கிழமை மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம் உள்ளிட்ட சில பகுதிகள் இராணுவத்தினரால் விடுவிக்கபப்ட்டு உள்ளது.
மயிலிட்டியில் நடைபெற்ற அந்நிகழ்வில் , யாழ் மாவட்ட இரானுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன கெட்டியாராச்சி யாழ் மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகத்திடம் கையளித்தார்.
மேலும் பாடசாலை மாணவர்களுக்கு அரச அதிபர் மற்றும் இரானுவத் தளபதி ஆகியோரால் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் வட மாகாண கல்விப் பணிப்பாளர்,இராணுவ உயர் அதிகாரிகள், அரச அதிகாரிகள், வலி வடக்கு பிரசே செயலர், பிரதேச சபைத் தவிசாளர், உறுப்பினர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.