– முன்னாள் விடுதலைப் போராளி ஜெகநாதன் –
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், பிரித்தானியா 12.02.2017
சிறிலங்கா அரசாங்கமும் இராணுவத்தினரும் இணைந்து எமது தமிழ் மக்கள் மீது பெரும் இனத் துரோகத்தினையும் வன் கொடுமைகளையும் கட்டவிழ்த்து வருகின்றது. இதில் நில ஆக்கிரமிப்பு என்பது மிகவும் கொடுமையானது.
முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த கேப்பாப்புலவு எனும் கிராமத்தில் தமிழ் மக்களினுடைய குடியிருப்பு நிலங்களை சிறிலங்கா இராணுவ விமானப்படையினர் அபகரித்துள்ளதோடு அந் நிலங்களுக்கு சொந்தமான மக்களை அங்கிருந்து விரட்டியுமுள்ளனர். இது சிறிலங்கா இராணுவத்தினால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ஒர் இன அழிப்பு. இதனை தட்டிக் கேட்கும் முகமாகவும், கேப்பாப்புலவு மக்கள் தமது குடியிருப்பு நிலங்களை மீட்பதற்காக இராணுவத்திற்கு எதிராக அங்கே உண்ணா விரதப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு நீதி கேட்டுப் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடைய நிலங்களை மீட்டுக் கொடுப்பதற்காகவும், அவர்களுடைய நியாயமான போராட்டத்திற்கு வலுச்சேர்கும் முகமாகவும் பிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் 12.02.2017 அன்று முதல் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நாடாத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது இதில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் பெரும் திரழாகக் கலந்து கொண்டு தமது ஆதரவினைத் தெரிவித்து வருகின்றார்கள். இந் நிகழ்வானது I Demand JUSTICE & ACCOUNTABILITY for SRI LANKAN TAMIL GENOCIDE March 2017 என்ற தலைப்பில் இலண்டனில் நடைபெற்று வருகின்றது.
இந்த பேராட்டத்தின் ஒழுங்கமைப்பாளர்களுள் ஒருவரும், முன்னாள் விடுதலைப் போராளியுமான திரு. சிவஞ்ஞானம் ஜெகநாதன் இது தொடர்பாக மக்களுக்கு உரையற்றினார்.
“எனது பெயர் சிவஞ்ஞானம் ஜெகநாதன். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடாத்திக்கொண்டிருக்கின்றோம். அது ஏனெனில் கேப்பாப்புலவு மக்கள் தமது காணிகளை இழந்து தவித்துக்கொண்டிருக்கின்றார்கள் அவர்களுக்காக நீதி கேட்டு நாங்கள் இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளோம். கேப்பாப்புலவு மக்கள் ஒன்று திரண்டு உண்ணாவிரதப் போராட்டத்தினை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள், இதனால் அம் மக்கள் பலவித துன்ப துயரங்களை இராணுவத்தினால் அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு உறுதுணையாகத்தான் நாங்கள் இங்கே இந்தப்போராட்டத்தை நடாத்திக்கொண்டிருக் கின்றோம். அத்தோடு பிரித்தானிய அரசாங்கத்திற்கும் எமது கேப்பாப்புலவு மக்களின் பரிதவித்த நிலையை எடுத்துரைப்பதற்காகவும், அவர்களின் துன்ப நிலையை எடுத்துரைத்தும் இப்போராட்டத்தை நடாத்திக்கொண்டிருக்கின்றோம”.
அவர் மேலும் தெரிவிக்கையில் “இதனூடாக ஓர் கருத்தனை பதிவு செய்ய விரும்புகின்றேன், சிறிலங்காவிலே சிறிலங்கா அரசாங்கத்தினால் சுதந்திர தின நிகழ்வு வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. ஆனால் அங்கே வாழ்கின்ற எமது தமிழ் மக்கள் இன்னனும் சுதந்திரமாக இல்லை. மாறாக பல துன்ப துயரங்களைத்தான் அனுபவித்து வருகின்றார்கள். இதனை உணர்த்துவதற்காகவும், இது குறித்து ஐ.நா சபைக்கு தெரியப்படுத்துவதற்காகவும் நாங்கள் இங்கே ஒன்று திரண்டு இந்த ஆர்ப்பாட்டத்தினை நடாத்துகின்றோம். இதில் எமது பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் பெரும் திரளாகக் கலந்துகொண்டிருக்கின்றார்கள். எமது தாயகத்தில் வாழ்கின்ற தற்கோது கேப்பாப்புலவு கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்ற எமது தமிழ் மக்களுக்கு ஓர் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காகவும், நாங்கள் இங்கே இந்த ஆர்ப்பாட்டத்தினை நடாத்திக்கொண்டிருக்கின்றோம். இதனை எமது தாயக மக்களுக்கு தெரிவிக்கின்றோம். அத்தோடு நடக்க விருக்கின்ற UN விசாரனையின்போது எமது மக்களுக்கு ஓர் நியாயமான தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும் என்று எமது எழுச்சிப் போராட்டத்தினை நடாத்திக்கொண்டிருக்கின்றோம்”.