கடந்த ஆடி மாதம் 17ம் திகதி 2016 அன்று Lee Valley Athletics Centre, 61 Meridian Way, London N9 0AR இல் பிரித்தானிய தமிழர் மெய்வல்லுனர் விளையாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் இனப்படுகொலையை தடுப்பதற்கும் அதற்கு எதிரான சட்ட நடவடிக்கைக்குமான சர்வதேச வழக்கு மையத்தின் (ICPPG) செயற்பாட்டாளர்கள், இலங்கை அரசினால் தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் மானுடத்திற்க்குப் புறம்பான குற்றங்கள்; தொடர்பான ஆதராங்கள் சேகரிப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் அமைக்கப்பட்டிருந்த ICPPG இன் நடமாடும் அலுவலகத்திற்கு பொறுப்பான திரு. மதுசன் இராஜலிங்கம் மக்களுக்கு ICPPG இன் செயற்பாடுகள் பற்றி தெளிவு படுத்தினார். ஆவர் தெரிவித்ததாவது ‘மானுடத்திற்க்குப் புறம்பான வகையில், அடிப்படை மனிதவுரிமைகளனைத்தும் மீறப்பட்ட நிலையில், ஈழத்தமிழினத்தின் மீது இலங்கை இனவாத அரசினாலும், அதன்முப்படைகளாலும் மனிதப் பேரவலங்கள் நிகழ்த்தப்பட்டு ஏழு வருடங்களாகி விட்டன. இலங்கை அரசால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த இனவழிப்புக் குறித்து நீதியான சர்வதேச விசாரணை ஒன்றினை வலியுறுத்திப் புலம்பெயர் நாடுகளில் உள்ள அனைத்துத் தமிழர் தரப்புக்களாலும் பலதரப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வகையில், ஈழத் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு, இம்மானுடத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகள்; மேலும் அவை சம்பந்தமாக சர்வதேச ரீதியில் சட்டநடவடிக்கைகளை மேற்கொண்டு அவற்றைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில்; சட்டப்பேராசிரியரும், சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் சட்டத்துறை விரிவுரையாளரும் கல்விமானுமாகிய கௌரவ திரு. முத்துக்குமாரசாமி சொர்ணராஜா அவர்களின் தலைமையில் பிரித்தானியாவைத் தலைமையகமாகக் கொண்டு தமிழர்களுக்கான வழக்குமையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அதுவே இந்த இனப்படுகொலையை தடுப்பதற்கும் அதற்கு எதிரான சட்ட நடவடிக்கைக்குமான சர்வதேச வழக்கு மையத்தின் (International Centre for Prevention and Prosecution of Genocide – ICPPG)”
ICPPG இன் குழு தலைவர்களில் ஒருவரான செல்வி. ரூபிணி கனகறஞ்சிதன் கருத்து தெரிவிக்கையில் ‘ஈழத்தமிழர்கள் மேல் நிகழ்த்தப்பட்ட இனவழிப்புப் போரினைச் சர்வதேச மனித உரிமை மன்றுகள் பல்வேறுபட்ட காரணங்களினால் உடனடியாக ஏற்றுக் கொள்ளாது போனாலும் பின்னர் பல படிமுறை நியமங்களின் ஊடாகவும் இலங்கைக்கு சார்பான நாடுகளின் எதிர்ப்பு நடவடிக்கைகளிற்கு நடுவிலும் இன்று அதி மேன்மைபொருந்திய மனித உரிமைகள் ஆணையாளர் திரு. நவநீதம்பிள்ளை அவர்களின் சரியான நகர்வுகளின் மூலமும் விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தமிழர்களுக்கான இந்த வழக்கு மையம் (ICPPG) மனித உரிமைகள் ஆணையாளர் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவிற்கு இலங்கை அரசாலும் அதன் படைகளாலும் மிகக் கடுமையான https://www.viagrasansordonnancefr.com முறையில் பாதிக்கப்பட்டவர்களது விபரங்களையும், சாட்சிகளையும் சர்வதேச சட்ட நியமங்களிற்கு ஏற்ப திரட்டி வழங்கி உள்ளது. தொடர்ந்தும் சாட்சியங்களை சேகரித்து ஆவணப்படுத்தி வருகின்றது. தமிழர்களுக்கான முறையான நீதி கிடைக்கும் வரை ICPPG இன் பணி தொடரும்’ என்றும் குறிப்பிட்டார்.
ICPPG இன் முக்கிய செயற்பாட்டாளர்களுள் ஒருவரான
செல்வி. தர்சிகா சிறிசிவகுமார் புலம்பெயர் நாடுகளில் வாழும் நேரடி மற்றும் மறைமுகப் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தாமாக முன்வந்து தகவல்களை வழங்க வேண்டும் என அறைகூவல் விடுத்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது ‘சாட்சியம் வழங்க முன்வருவோரின் உச்சக் கட்டப் பாதுகாப்பு சட்டரீதியாக உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் மூலம் மொத்த தமிழீழ மக்களுக்கும் நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும் என்ற நோக்கில் இம்மையதின் செயற்பாட்டாளர்கள் மக்களை சந்தித்து மையத்தின் செயற்பாடுகள், அதன் தேவைப்பாடுகள், மக்களின் கடமை
மற்றும் பங்கு, வழங்கப்படும் சாட்சியங்கள் பாதுகாக்கப்படுவதற்க்கான உறுதித்தன்மை பற்றியும், எவ்வகையில் மையத்தினைத் தொடர்பு கொள்ள முடியும் போன்ற விளக்கங்கள் பரப்புரைகளில் ஈடுபட்டிருந்தோரால் மக்களுக்கு அழிக்கப்பட்டது’.
இவர்களுடன் இணைந்து ஆதாரங்கள் திரட்டும் பணியில் ஈடுபட்ட, மட்டக்களப்பு தொழிநுட்ப கல்லூரி விரிவுரையாளரும் முன்னாள் போராளியுமாகிய திரு. சுதன் வீரபத்திரபோடி, ICPPG மற்றும் TIC ஆகிய அமைப்புக்களால் நடாத்தப்படும் ஆய்வுபணிக்காக, 1983 – 1987 காலப்பகுதியில் இலங்கையில் STF (Special Task Force) ஆல் பாதிக்கபட்டவர்களின் விபரங்களை கோரியிருந்தார். பிரித்தானியாவில் உள்ள அமைப்பு ஒன்றினாலேயே STF க்கான பயிற்சி வழங்கப்பட்டிருந்ததால், STF இழைத்த மனித உரிமை மீறல்களில் இந்த அமைப்புக்கும் உடந்தை இருப்பதால், பாதிக்கபட்டவர்களின் குடும்பங்களுக்கு இந்த அமைப்பில் இருந்து நட்டஈடு கோர முடியும் என்றும் இவர் தெரிவித்திருந்தார்.
இவர்களுடன், ICPPG செயற்பாட்டாளர்களான திரு. உமேசன் தர்மலிங்கம், திரு. குகரூபன் கணேசலிங்கம், செல்வி. பிரேமிகா இராகுலன், செல்வி. தர்சிகா நடராசா,
செல்வி. செல்வமதி, திரு. தனுசன், திரு. புஸ்பதரன் புத்திரசிகாமணி மற்றும் திரு ரேமியன் ரூபராஜன் ஆகியோர், ICPPG இன் லண்டனுக்கான நிறைவேற்று பணிப்பாளரான செல்வி. அம்பிகை சீவரத்தினம் தலைமையில் இந்த பணியை மேற்கொண்டனர்.
இந்த மையத்திற்கு பெரும் எண்ணிக்கையான மக்களின் வரவேற்பு கிடைக்கப் பெற்றிருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது. இந்த விளையாட்டு விழாவிற்கு வந்திருந்தவர்களில் பலர், இவ் விளையாட்டு விழாவில் அமைக்கப்பட்டிருந்த ICPPG சாவடியில் தாமாக முன் வந்து தமது பெயர் விபரங்களைப் பதிவு செய்தனர்.
இலங்கை அரசால் பாதிக்கபட்டவர்கள் சாட்சியங்களை வழங்க icppguk@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரி முலம் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளபட்டுள்ளனர்.