SHARE

Dilaksan Manorajan 

தமிழினப்படுகொலையின் 16 ஆவது ஆண்டு நினைவு நாளினை உலகெமெங்குமுள்ள தமிழர்கள் உண்ர்வெளிச்சியுடன் இன்று நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழர்களும் இனைப்படுகொலை நாளினை பேரெழுச்சியாக நினைவு கூர்ந்தனர்.

பிரித்தானியாவின் டவுனிங் வீதியில் உள்ள பிரித்தானியா நாடாளுமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 16ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் நினைவுகூரப்பட்டது.

பிரித்தானியா நாடாளுமன்றத்திற்கு முன்பாக ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர் யுவதிகள் நாடாளுமன்றத்திற்கு முன்பாக கனயீர்ப்பினை வெளிப்படுத்தி பேரணியாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு முன்பாக வரை சென்றடைந்தனர்.