SHARE

எமது பிரச்சினைக்கு சில தினங்களுக்குள் தீர்வு வழங்காவிட்டால் வீதி மறிப்பு போராட்டம் செய்வோம். அத்துடன் சாகும் வரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்” என மட்டக்களப்பு கால்நடை பண்ணையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தங்களுக்குச் சொந்தமான மேய்ச்சல் தரைகளை மீட்டுத்தருமாறு கோரியே பண்ணையாளர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்கள் தொடர்ந்து  19வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்போது நீதிமன்ற கட்டளையினை நடைமுறைப்படுத்துமாறும்,கால்நடை பண்ணையாளர்களின் நிலத்தை விட்டுவெளியேறுமாறும் கால்நடை பண்ணையாளர்களை வாழவிடுமாறும் கோசங்கள் எழுப்பப்பட்டன.

சில அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் போராடிவரும் தம்மை கேலிக்குரியதாக எண்ணுவதாகவும் தீர்வினை வழங்கவேண்டியவர்கள் இவ்வாறு தம்மை கருதுவது கவலைக்குரியது எனவும் தமக்கான தீர்வினை சில தினங்களுக்குள் வழங்காவிட்டால் மாவட்டத்தில் பாரியளவிலான வீதி மறிப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும்,   சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Print Friendly, PDF & Email