SHARE
image_pdfPRINT

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யுத்தத்தின் போது காணாமல் போன மற்றும் இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் குடும்பங்களின் பிள்ளைகள் காணாமல் போனமை தொடர்பாகவும் நீதியான விசாரணைக்கு சர்வதேச விசாரணை கோரியும் குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.