SHARE

வெளிவரும் அதிர்ச்சி தகவல்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து மனித எச்சங்களின் அகழ்வு பணிகள் கடந்த 06.09.23 அன்று தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அகழ்வு பணியின் ஐந்தாவது நாளான நேற்று (11)  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவர், மூன்று உடற்பாகங்கள் மீட்கப்பட்டதாகவும், ஏற்கனவே மீட்கப்பட்ட இரண்டு உடற்பாகங்களுடன் ஐந்து உடற்பாகங்கள் மொத்தமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

13 மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் மேலும் குறித்த புதை குழியில் ஒன்றன் மேல் ஒன்றாக நெருக்கமாக உடலங்கள் காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார். அத்துடன் எடுக்கப்பட்ட மனித எச்சத்தில் துப்பாக்கிச் சன்னம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.

மேலும், மிக மிக நெருக்கமாக பல மனித எலும்பு கூட்டு தொகுதிகள் காணப்படுகின்றன எனவும் அகழ்வு பணி தொடங்கியதில் இருந்து இதுவரை ஐந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.

Print Friendly, PDF & Email