SHARE
smartcapture

சிங்கள பேரினவாதத்தின் தடைகள் மற்றும் அச்சுத்தல்களை தாண்டி குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் வழிபாட்டிடத்தில் பொங்கல் நிகழ்வு சிறப்புற நடைபெற்றது.

குறித்த பொங்கள் நிகழ்வுக்கு பௌத்த பிக்குமார் மற்றும் சிங்கள கடும்போக்குவாதிகளினால் குழப்பம் விளைவிக்கப்படலாம். அதனால் பொங்கல் விழாவை நிறுத்துமாறு பொலிசாரால் தடை கோரியிருந்த நிலையிலும் அனைத்து தடைகளையும் தாண்டி குருந்தூர் மலையில் ஒன்று திரண்ட தமிழ் மக்களினால் தொல்லியல் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய பொங்கல் பானை வைக்கப்பட்டு பொங்கல் பொங்கி ஆதிசிவன் ஐயனாருக்கு மக்கள் வழிபாடு செய்தனர்.

அதேவேளை தென்னிலங்கையிலிருந்து வெறும் 30 பேர்வரையிலான சிங்கள மக்களோடு வருகை தந்திருந்த பிக்கு ஒருவர் பொங்கல் நடைபெறும் இடத்தை நெருங்கி குழப்பம் விளைவிக்க முற்பட்ட வேளை அங்கு திரண்டிருந்த தமிழ் மக்கள் அவரை அப்பகுதிக்கு நெருங்க விடாது தடுத்து திருப்பி அனுப்பியிருந்தனர். இதன் போது அப்பகுதியில் சிறு குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.

dav
Print Friendly, PDF & Email