SHARE

பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் நேற்றுமுதல் தண்ணீர் வசதியின்றி நோயாளர்கள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் தவித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து  பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையின்  அத்தியட்சகர் கருத்துத் தெரிவிக்கையில்”எமது மருத்துவ மனைக்கு நீர் வழங்கும் பிரதான நீர்ப்பம்பி  செயலிழந்துள்ளமையினால்  நேற்று முதல் தண்ணீர் வசதியின்றித்  தவித்து வருவதாகவும், இதனையடுத்து சிறிய ரக தண்ணீர் பம்பி மூலம் பகுதி பகுதியாக நீர் வசதி செய்யப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன்  புதிய தண்ணீர் பம்பியை  கொள்வனவு செய்வதற்க்கு பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனையின் அனுமதியை பெற்று மீளமைக்க கால தாமதமாகலாம் என்றும் யாராவது 7.5 குதிரை வலு கொண்ட நீர்ப்பம்பி ஒன்றினை கொடையளித்தால் தண்ணீர் பிரச்சினை உடனடியாக தீர்க்கப்படலாம் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே  குறித்த பகுதியில்  ஒரு லீற்றர் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர்   130 ரூபாயில்  இருந்து 150 ரூபாய் வரையும் விற்பனைசெய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email