SHARE
image_pdfPRINT

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை இன்று (08) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில்  நீதிபதி ரி.பிரதீபன் தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது ”அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்படும் எனவும்,  சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் நேரில் சென்று கள ஆய்வினை மேற்கொண்டு அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கான  மதிப்பீடுகளை மேற்கொள்ளவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து இவ்வழக்கு விசாரணையில் கலந்து கொண்ட சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் ”கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு ஜனாதிபதியின் பிரிவில் இருந்து நிதி கிடைக்கப்படவுள்ளதாக காணாமல் போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது” என்றார்.