SHARE
image_pdfPRINT

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட இலங்கையின் பல பகுதிகளிலும்; கண்டெடுக்கப்பட்ட மனித புதைக்குழிக்கு நீதி கோரியும் சர்வதேச கண்கானிப்பின் கீழ் உண்மைகளை வெளிப்படுத்த வலியுறுத்தியும் இன்று தமிழர் தாயகத்தில் பூரண ஹர்த்தால் கடைப்பிடிக்கப்பட்டதுடன் வட்டுவாகல் பாலத்திலிருந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகம் நோக்கிய மாபெரும் மக்கள் பேரணியும் இடம்பெற்றது.

இந்த ஹர்த்தாலுக்கு, வர்த்தகர் சங்கங்கள், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கங்கள் உள்ளிட்ட பல சங்கங்களும் சிவில் அமைப்புக்களும் ஆதரவினை தெரிவித்துள்ளனர்.

மேலும், யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் மனித புதைக்குழி விவகாரத்திற்கு சர்வதேச மத்தியஸ்தத்துடன் விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தி இன்றைய ஹர்த்தாலுக்கு முழுமையாக ஆதரவினை வழங்கியுள்ளனர்.
ஹர்த்தால் காரணமாக வடக்கு – கிழக்கில் பெரும்பாலான பகுதிகள் வெறிச்சோடி காணப்படுவதையும் அவதானிக்க முடிகிறது.