SHARE

பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய முன்மொழிவுகளை, இன்று  வரைபுக் குழு ஆராய உள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

திருத்தங்கள் குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுத்த பின்னர் சட்டமூலம் மீண்டும் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.

வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களையும் பரிசீலித்து ஊழல் ஒழிப்புச் சட்டமூலத்தை நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.

உண்மையைக் கண்டறியும் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகத்திற்கு பணிப்பாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்பட்டு செயலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

சம்பந்தப்பட்ட தரப்பினரின் ஆலோசனைகளை உள்ளடக்கிய பின்னர், வரைபு தயாரிப்பதற்குத் தேவையான பணியாளர்களை நியமிக்கபட்டு உரிய சட்டம் இயற்றப்பட்ட பிறகு முறையான பொறிமுறை ஆரம்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email