SHARE

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மத்தியில் பச்சை சீருடைகள், பெண்களின் உள்ளாடைகள் என்பனவற்றுடன் பல்வேறு மனித எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன. இது மற்றொரு மனிதப் புதைகுழியா என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் 20 புதைகுழிகளை இனங்கண்டு 5 அமைப்புகள் அறிக்கை வெளியிட்டு சில நாள்களின் பின்னர் முல்லைத்தீவில் மேலும் ஒரு மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தை தோண்டியபோதே மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கொக்கிளாய் பொலிஸாருக்கு இது தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அது பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டது. நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக இன்று அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படும் என்று தெரியவருகின்றது.

Print Friendly, PDF & Email