SHARE

தமிழ் மகளிர் அபிவிருத்தி மன்றம் வழங்கும் சுடரி விருதுகளுக்கான விண்ணப்பங்கள்/பரிந்துரைகள் கோரப்படுகின்றன.

இந்த விருதுகளுக்கு பொருத்தமானவர்களை யாரும் பரிந்துரை செய்ய முடியும். தங்களைத் தாமே கூட பரிந்துரை செய்யவும் முடியும்.

இணைந்த கரங்கள் – (பிரித்தானியா வாழ் ஏனைய சமூகத்தவர்க்கான விருது) மற்றும் தனியொருத்தி (இலங்கை )தவிர்ந்த ஏனைய விருதுகள் பிரித்தானியா வாழ் இலங்கைத் தமிழ்ப்பெண்களுக்கானவை.
இலங்கைத் தமிழ் பெண்களுக்கும் அவர்கள் மரபுவழி தலைமுறைகளும் இந்த விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்படலாம்.

முதல் முறையாக மக்களின் பரிந்துரைகளினூடாக பெறப்படும் இந்த விண்ணப்பங்களானவை தகுந்த நடுவர் குழாம் ஒன்றினால் பிரித்தானிய தமிழ்மகளிர் அபிவிருத்தி மன்றத்தின் மேற்பார்வையில் பரிசீலனை செய்யப்படும். விண்ணப்பங்களின் உண்மைத்தன்மையும் அதன் விபரங்களும் உரிய வழிகளில் சரிபார்க்கப்படும்.

விண்ணப்பதாரிகளின் சேவைத் தன்மை அவர்கள் சமூகத்தில் எற்படுத்தக்கூடிய மாற்றங்கள் , அவர்கள் ஆளுமை மற்றும் தலைமைத்துவப் பண்புகள் , சமூக இணைவாக்கம் , புரட்சிகர மாற்றங்கள், அவர்கள் தமிழ்ச் சமூகத்தை எவ்வாறு பிரதிநிதிப் படுத்துகின்றார்கள் என்பதோடு , எமது சமூக விழுமியங்கள் மற்றும் பெருமைகளை எவ்வாறு உலகறியச் செய்கின்றார்கள் என்பவையும் கருத்தில் கொள்ளப்படும்.

தமிழ் மகளிர் அபிவிருத்தி மன்றம் இந்த விருதுகள் சரியான நபர்களை மட்டுமே சென்றடைய வேண்டும் என்னும் விடயத்தில் மிகக் கவனமாக செயற்படும் என்பதோடு இந்த விருதுகளின் தெரிவுகள் பக்கச்சார்பு அல்லது தனிமனித விருப்பு வெறுப்புக்களின் தாக்கங்கள் எதுவும் அற்றவையாக இருக்கும் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்தக் கடமைப்பட்டுள்ளது.

இந்த விருதுகளுக்கான இலத்திரனியல் விண்ணப்பப் படிவங்களை மின்னஞ்சல் ஊடான கூகிள் படிவங்கள் மூலமாகவும் https://forms.gle/YDSrGfu38L49vjCCA
சுடரி விருதுகளுக்கான இணையத்தளத்தினூடாகவும் www.sudariawards.co.uk பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த விருதுகளுக்குப் பல வரைமுறைகள் உள்ளன. அவற்றை எமது இணையத் தளத்தில் பார்வையிட முடியும். அனைத்து விண்ணப்பங்களும் வரைமுறைகளுக்கு உட்பட்டவை.

எம்மை உலகிற்கு கொண்டுவரும் மகத்தான சக்தியைக் கொண்ட பெண்களை, அவர்களது அடையாளங்களை உலகறியச் செய்ய வேண்டியது எங்கள் ஒவ்வொருவரதும் கடமை.

இன்றே உங்களுக்குத் தெரிந்த ஆளுமைகளைப் பரிந்துரை செய்யுங்கள்.

தொடர்பு : https://linktr.ee/sudariawards
📞 : +44 7438 547367

வரைமுறைகளைப் பார்வையிட :
https://sudariawards.co.uk/assets/pdf/TERMS_AND_CONDITION_SUDARI.pdf

இணையத்தளம் : பரிந்துரை/சுய பரிந்துரைக்கான விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ள www.sudariawards.com

Print Friendly, PDF & Email