SHARE

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 25.2 சதவீதமாகவும், உணவுப் பணவீக்கம் 21.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

ஏப்ரலில் பணவீக்கமானது 35.3 வீதமாகவும், உணவுப்பணவீக்கம் 30.6 வீதமாகவும் காணப்பட்ட நிலையிலேயே மே மாதத்தில் சாதகமான வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

பணவீக்கத்தின் இந்த வீழ்ச்சியானது, பரந்தளவில் இலங்கை மத்திய வங்கியினால் 2023 ஏப்ரலில் எதிர்பார்க்கப்பட்ட பணவீக்க வீழ்ச்சிப் பாதைக்கு அமைவாகக் காணப்படுவதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

உணவுப் பணவீக்கமானது ஏப்ரலில் 30.6 வீதத்திலிருந்து மே மாதத்தில் 21.5 வீதத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
உணவல்லாப் பணவீக்கம் ஏப்பிரலில் 37.6 வீதத்திலிருந்து 27 வீதத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது..

பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கம் ஏப்ரலில் 27.8 சதவீதத்திலிருந்து மே மாதம் 20.3 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாண்டின் 3 ஆம் காலாண்டில் ஒற்றை இலக்க மட்டங்களை நோக்கி பணவீக்கத்தினை தொடர்ந்தும் குறைவடையச்செய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Print Friendly, PDF & Email