SHARE
image_pdfPRINT

மட்டக்களப்பு மண்ணில் உண்ணாவிரத அறப்போர் புரிந்து காந்தி தேசத்திற்கே அகிம்சையைப் போதித்து தன்னுயிர் நீத்த அன்னை பூபதியின், உண்ணாவிரத அறப்போராட்டத்தின் 35ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (புதன்கிழமை) யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியத்தால் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த நினைவேந்தலில், பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.