SHARE

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் விதிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை உரையாற்றிய போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு என்பது காலம் காலமாக ஏமாற்றப்படும் ஒரு செயற்படாகவே காணப்படுகிறது.

தமிழர்களின் உரிமைகளை அழித்து சிங்கள குடியேற்றத்தை ஸ்தாபிக்கும் பணிகளை அரச அதிகாரிகள் துரிதமாக முன்னெடுத்து வருகிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் ஒழிப்பு தொடர்பில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என நாணய நிதியம் விசேட நிபந்தனை முன்வைத்துள்ளது.

ஆட்சியாளர்கள் ஊழலை முதன்மையாக நிலை நிறுத்தி செயற்பட்டதால் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது.

ஊழல் மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டால் மாத்திரம் தான் நாட்டின் எதிர்காலம் சிறந்ததாக அமையும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email