SHARE

இலங்கைக்கான நம்பகமான நிதி உத்தரவாதம் மிகவும் அவசரம் என அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் யனெட் யெலென் தெரிவித்துள்ளார்

இந்தியாவின் பெங்களூருவில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமான ஜி-20 குழுவின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் பங்கேற்ற மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் அழுத்தத்தில் உள்ள உருவாகிவரும் சந்தைகளிற்கான அர்த்தபூர்வமான கடன் நடவடிக்கைகளில், சீனா உட்பட அனைத்து கடன் கொடுப்பனவு நாடுகளும் கலந்துகொள்ளவேண்டும் என அமெரிக்கா தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் எனவும் அவர் கூறினார்.

பல நாடுகளின் முன்னோக்கிய வளர்ச்சியை தடுத்துவைத்துள்ள கடன் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு இணைந்து பணியாற்றுவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Print Friendly, PDF & Email