SHARE
image_pdfPRINT

சரத் பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி நேரிடும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சமஷ்டியை கோருபவர்கள் லண்டனில் போய் அதனை கோருமாறு சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்திற்கு பதிலளிக்கும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

எங்களை லண்டனுக்கு போக சொன்னால் அவரை நாங்கள் போத்துக் கல்லுக்கு அனுப்ப வேண்டி வரும். பொன்சேகா என்பது சிங்கள பெயருமல்ல தமிழ் பெயரும் அல்ல. எனவே அவரை போத்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி வரும்.“ எனத் தெரிவித்துள்ளார்