SHARE
image_pdfPRINT

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதான வீதியில் சுன்னாக பகுதியில் காரில் பயணித்த விக்டர் எனப்படும் நபருக்கு பட்டாரக வாகனத்தில் வந்த ஜெகன் குழுவினர் மோதி விபத்துக்குள்ளாக்கி வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் செயற்படும் இரண்டு வாள்வெட்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக இன்றைய தினம்  பகலில்  திரைப்பட பாணியில் பட்டாரக வாகனத்தினால் காரொன்றில் பயணித்தவரை மோதி விபத்துக்குள்ளாக்கி வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த வாழள்வெட்டு தாக்குதலில் நால்வர் காயமடைந்து யாழ்.போதன வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள் குறித்த இடத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் களம் இறக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது.