SHARE
image_pdfPRINT

சிவகுரு ஆதின முதல்வரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான தவத்திரு வேலன்சுவாமிகள் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மாணவர்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள்ஐவரை கைதுசெய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது

அண்மையில் தேசிய தைப்பொங்கல் விழாவில் பங்கேற்க வந்த ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக நல்லூர் அரசடிப் பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தில் பொலிசாரை தாக்கியமை தொடர்பாகவே கைது இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது.

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட பின்னர்வேலன் சுவாமி கைது செய்யப்பட்டுள்ளார். ஏனையோரும் கைது செய்யப்படவுள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்