SHARE

கிராஞ்சியில் கடலட்டை பண்ணைக் கெதிராக போராடும் 10 பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராஞ்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைக் கெதிராக இன்றுடன் 66 வது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையிலேயே நேற்றைய 65 ஆவது நாளில் நீதிமன்றினால் 10 பேருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மகளிர் அமைப்பு தலைவி பரிமலா நமது ஈழநாட்டிற்கு தெரிவித்துள்ளார்.

நீதிமன்றில் தொடரப்பட்டுள் வழக்கு தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துள்ள போராட்டக்காரர்கள், சுமார் இரு மாதங்களிற்கு மேலாக தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தொழில் ஏதும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றோம். அந்தவகையில் கடலட்டைப்பண்ணை நிறுவனங்களிற்கு ஆதரவாக எமது போராட்டத்தை முடக்கவும் எமக்கு அச்சுறுத்தல் விடுக்கவுமே இவ்வாறு எங்கள் மிது வழக்கு தொடரப்பட்டுள்ளது என தாம் எண்ணுவதாக தெரிவித்தனர்.

அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இருவர் எவ்வித காரணமுமின்றி பொலிசாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுஇ பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடலட்டைப் பண்ணைக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டத்தில் இடுபட்டு வரும் நிலையில் மக்களின் எதிர்ப்பையும் மீறி மேலும் கடலட்டை பண்ணைகளை அமைக்கும் முயற்சியில் நிறுவனங்கள் ஈடுபட்டுவருவதாகவும் அதற்கான அளவுகளை அவர்கள் எடுத்துவருவதாகவும் அம் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Print Friendly, PDF & Email