SHARE

சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகளால் தமது கடற்றொழில் பாதிப்படைந்துள்ளதாக கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த கிராஞ்சி மீனவர்கள் இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிராஞ்சி இலவன் குடா கடற்பரப்பில் இன்று 55 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலேயே பத்திநாதர் மடுத்தீன் (வயது70) மகேந்திரம் (வயது47) ஆகிய இருவர் பொலிஸாரினால் பிடியாணை எதுவுமின்றி அதிரடியாக கைதுசெய்யப்பட்டு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

கிராஞ்சி இலவன் குடா கடற்பரப்பில் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமாக அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கடல் அட்டை பண்ணைகளால் தமது பாரம்பரிய சிறகுவலை மீன்படி தொழிலும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதாக கூறி இன்றுடன் 55 நாட்களாக கிராஞ்சி மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை குறித்த சட்டவிரோத கடலட்டை பண்ணைகளுக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவிலும் முஐறப்பாடு செய்யப்பட்டு அங்கு நடந்த இரு கட்ட விசாரணையில் குறித்த கடலட்டை பண்ணைகளுக்கு சொந்தமகன நிறுவனங்கள் அவற்றை அகற்றுவதாகவும் வாக்குறி அளித்திருந்தன. எனினும் இதுவரையில் அகற்றப்படவில்லை.

இந்நிலையில் குறித்த நிறுவனங்களினால் இன்று கடலட்டை பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் மேலும் அளவு நடவடிக்கைகள் இடம்பெற்றன என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நமது ஈழநாட்டிற்கு தெரிவித்தனர்.

Print Friendly, PDF & Email