SHARE

அவர்கள் சித்திரவதைக்கு மற்றும் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுவர் என்கிறார் சிரேஸ்ட சட்ட ஆலோசகர் கீத் குலசேகரம்

தியாகோகார்சியா தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் மற்றும் ஒரு சில இந்தியர்களை திரும்ப நாடு கடத்துவது சட்டவிரோதமான நடவடிக்கை என, அந்தத் தீவில் உள்ள அகதி தஞ்ச கோரிக்கையாளர்களை பிரதிநிதித்துவம் செய்யும் மூத்த சட்ட ஆலோசகர் கீத் குலசேகரம் தெரிவித்துள்ளதுடன், அவர்கள் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு திரும்பினால் அவர்கள் சித்திரவதை, மற்றும் துன்புறுத்தலிற்குள்ளாவர்கள் எனவும் அதனால் அவர்கள் அங்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார்.

பிரிட்டனில் இருக்கும் சிரேஸ்ட சட்ட ஆலோசகர் கீத் குலசேகரம் இது பற்றி மேலும் தெரிவிக்கையில்,

தியாகோகார்சியாவில் உள்ள இலங்கையர்களை நாடு கடத்துவது குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை எனத் தெரிவித்துள்ள அவர் அங்குள்ள இலங்கையர்கள் மற்றும் இந்தியர்கள் புகலிடக்கோரிக்கைகளிற்கான வலுவான காரணங்களை கொண்டுள்ளதால் அவர்களை நாடு கடத்துவது சட்டவிரோதமானது.

தியாகோகார்சியாவில் உள்ளவர்களை நாடு கடத்துவது குறித்து இலங்கைக்கோ இந்தியாவிற்கோ உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் அனுப்பப்படவில்லை. அவர்கள் அனைவரும் புகலிடக் கோரிக்கைக்கான வலுவான ஆதாரங்களை கொண்டுள்ளனர் அவர்களை நாடு கடத்துவது சட்டவிரோதமானது.

பிரிட்டிஷ் இந்திய வெளிநாட்டு பிரதேச நிர்வாகம் இலங்கையர்களின் புகலிடக் கோரிக்கையை கருத்தில் எடுக்காமல் அவர்களை வெளியேற்ற முடியாது என தெரிவித்துள்ள அவர் அவ்வாறு வெளியேற்றுவது 1951 ஆம் ஆண்டின் அகதிகள் சாசனத்திற்கு முரணாண விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும் சில வாரங்களிற்கு முன்னர் பிஐஓடி தனது பகுதியில் உள்ள அகதிகளை பிரிட்டனிற்குள் அனுமதிப்பதில்லை என்பது பிரித்தானியாவின் கொள்கை என அறிவிக்கப்பட்டது. அத்துடன் புகலிடக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால் கூட அவர்களை பிரித்தானியாவிக்குள் நுழைய அனுமதிக்கப்போவதில்லை என்றும் புகலிடக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களை பாதுகாப்பான மூன்றாவது நாட்டிற்கு அனுப்பப்படுவார்கள் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு செல்வதற்கு விருப்பம் தெரிவித்தவர்கள் ஏற்கனவே திருப்பிச் சென்று விட்டனர், வேறு சிலர் தியாகோ கார்சியாவிலிருந்து ரீ யூனியன் தீவிற்கு சென்றுள்ளனர். தியோகோ கார்சியாவில் உள்ளவர்கள் இலங்கைக்கு திரும்பினால் துன்புறுத்தலிற்குள்ளாவர்கள் அதனால் அவர்கள் அங்கு செல்ல விரும்பவில்லை என குலசேகரம் தெரிவித்துள்ளார்.

தற்போது தியாகோ கார்சியா தீவில் அவர்களுடைய அடிப்படை மனித உரிமைகள் பலவழிகளில் மீறப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் அவர்களை பல மாதங்கள் எந்தவித தொடர்பும் இன்றி தடுத்துவைத்திருந்தனர். தற்போதும் அவர்கள் தற்காலிக முகாம்களில் மோசமான நிலையிலேயே வைத்திருக்கப்படுகின்றனர். அவர்களை தாங்கள் “தடுத்துவைக்கவில்லை” என தியாகோ கார்சியா நிர்வாகம் தெரிவித்தாலும் அவர்களின் சுதந்திரம் நியாயமற்ற முறையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுடைய முகாம்கள் முள்வேலிகளால் முடக்கப்பட்டுள்ளன, அவர்களின் முகாம்கள் ஆயிதம் தரித்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அங்குள்ள மக்கள் முகாம்களில் இருந்து வெளியேற முடியாது தொலைபேசிகளையும் இணையத்தையும் பயன்படுத்துதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மிக குறைந்தளவு மருத்துவ வசதிகளே உள்ளன எனவும் குலசேகரம் தெரிவித்துள்ளார். இதனால் அவர்களின் உடல் உள்நிலை மேலும் மோசமடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email