SHARE

கிராஞ்சி இலவன்குடா கடலில் அண்மைக்காலமாக அமைக்கப்பட்டுவரும் கடல் அட்டைப்பண்ணைகள் சட்டவிரோதமானவையே என ஏற்றுக்கொண்டுள்ள தேசிய நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனம் அவற்றினை அகற்றும் பொருட்டு ஒருவாரகாலத்திற்குள் குறித்த அட்டைப்பண்ணைகளுக்கு எதிராக வழக்கு தொடர்வதாக உறுதியளித்துள்ளது.

இலவன்குடா சட்டவிரோத கடல் அட்டைப்பண்ணை விவகாரம் குறித்து யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று நடைபெற்ற 2 ஆம் கட்ட விசாரணையின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளது.

கிராஞ்சி இலவன்குடா கடலில் அமைக்கப்பட்டுள்ள மற்றும் தொடர்ந்தும் புதிது புதிதாக அமைக்கப்பட்டுவரும் கடல் அட்டைப்பண்ணைகளினால் தமது அன்றாட வாழ்வியல் பாதிப்படைவதாகவும் தமது பாரம்பரிய சிறகுவலை மீன்படித் தொழில் பாதிப்படைவதாகவும் தெரிவித்து அப்பகுதி மீனவர்கள் கடந்த 28 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையிலேயே மேற்படி மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணையில் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனம் சட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் இன்று நடைபெற்ற 2 ஆம் கட்ட விசாரணையில் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனம்இ தேசிய நீரியல் வள அபிவிருத்தி நிறுவனம் இ யாழ்.கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் மற்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் பாதிக்கப்பட்ட தரப்பினர் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email