நமது ஈழநாட்டின் வாழ்வாதாரத்திட்டத்தின் கீழ் இம்முறை இலண்டனிலிருந்து நேரடியாக இலங்கைக்கு சென்ற நமது ஈழநாடு குழாமினை சேர்ந்த வர்ணகுலசூரிய ஷேஷன் பெர்னாண்டோ அவர்களினால் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள போரினால் பாதிப்புக்குள்ளான குடும்பங்களிற்கு உலர் உணவுகள் வழங்கிவைக்கப்பட்டன.
யுத்தத்தினால் தமது உடல் அவையங்களை இழந்து பாதிப்புக்குள்ளாகிய மாற்றுத்திறனாளிகள், வறுமைக்கோட்டின் கீழ் உள்ள முன்னாள் போராளிகள் மற்றும் பெண் தலைமையைக்கொண்ட மாவீரர் குடும்பங்களிற்கு நமது ஈழநாடு வாழ்வாதாரத்திட்டத்தின் கீழ் மாதாந்தம் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையிலேயே நடப்பு மாதத்திற்கான உதவித்திட்டத்தை இலண்டனிலிருந்து நேரடியாகவே இலங்கைக்கு சென்ற நமது ஈழநாட்டு குழாமினைச்சேர்ந்த வர்ணகுலசூரிய ஷேஷன் பெர்னாண்டோ அவர்களினால் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கீத் குலசேகரம் அவர்களின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின் ஊடாக 2 இலட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவுகள் 19 குடும்பங்களிற்கு வழங்கிவைக்கப்பட்டன. அதேவேளை 6 குடும்பங்களின் இல்லத்திற்கு நேரடியாக சென்று அத்தியவசிய உணவுப்பொதிகளை வழங்கினார்.