SHARE

இனப்படுகொலை செய்யப்பட்ட வலிசுமந்துகொண்டிருக்கும் இனத்தின் மக்கள் என்ற உணர்வுடன் அறிவாயுதம் ஏந்தி ஐ.நா.வில் போர் செய்ய வாருங்கள் என உலகத்தமிழர் இயக்கம் இளையோருக்கு அழைப்பு விடுக்கின்றது.

நடைபெற்று முடிந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரின் களத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் குரலாக முனைப்புடன் செயலாற்றிய உலகத்தமிழர் இயக்கம் 70 மேற்பட்ட பிரதிநிதிகளை ஐ.நா.விற்கு அழைத்து பிரதான அமர்வு மற்றும் பக்க அமர்வுகளில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் குரலாக அவர்களின் குரலை பதிவு செய்திருந்தார்கள்.

அத்தோடு மட்டும் நின்றுவிடாத உலகத்தமிழர் இயக்கம், ஐ.நா. முன்வைக்கும் உள்நாட்டு பொறிமுறை தமிழர்களுக்கான நீதியை ஒருபோது தராது என்பதுடன் அதனை எமக்குள் திணிக்க வேண்டாம் என்று மறுத்து வருவதுடன் தமிழர்களுக்கான நீதியை சர்வதேச அரங்கிலேயே பெற முடியும் என்பதை நன்குணர்ந்து எதிர்காலத்தை கருத்திற்கொண்டு தமிழ் இளையோரை அதற்கான தயார்படுத்தலில் ஈடுபடுத்திவருகிறார்கள். ஐ.நா.விற்குள் அதன் பொறிமுறைக்குள் எவ்வாறு பணியாற்றுவது என்று அவர்களை நேரடியாகவே களப்பணியில் ஈடுபடுத்தி கற்றல் செயற்பாட்டையும் அவர்களுக்கு செய்து வருகிறார்கள்.

அந்தவகையில் உலகலாவிய ரீதியில் சுமார் 9 ஆயிரத்து 600 க்கு மேற்பட்ட அமைப்புக்களுடன் (தமிழ் மற்றும் பிறமொழி) இணைந்து பணியாற்றுவதோடு மட்டுமல்லாது தமிழ் மக்கள் வேண்டிநிற்கும் நீதியை சர்வதேச அரங்கில் பெற அயராது பணியாற்றும் உலகத்தமிழர் இயக்கத்தின் பொதுச்செயலாளர் நிஷா பீரிஸ் அவர்கள் நமது ஈழநாட்டிற்கு வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்த ஐ.நா.களம் மற்றும் அதற்குள் மேலும் எவ்வாறான நகர்வுகள் செய்யவேண்டும் என்பது பற்றி அறிய கீழுள்ள காணொளியை பார்வையிடவும்.

வீடியோ- சிதம்பர சுப்பிரமணியம் திருச்செந்தில்நாதன்

Print Friendly, PDF & Email