SHARE

ஐ.நா.மனித உரிமைகள் குழுவின் முன்னாள் செயலாளர்

இலங்கையை காலணித்துவத்திலிருந்து விடுவித்த போது வாக்கெடுப்பு ஒன்று நடைபெற்றிருக்கவேண்டும். சிங்களவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உள்ளதைப்போலவே தமிழர்களுக்கும் உண்டு. எனவே ஐ.நா.வின் கண்காணிப்பின் கீழ் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். இதனை பேரவையில் தீர்மானமாக முன்வைக்கலாம் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை குழுவின் முன்னாள் செயலாளரும் ஜெனிவாவில் சர்வதேச சட்டம் மற்றும் இராஜதந்திர பேராசிரியருமான ALFRED DE ZAYAS தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்ட இவர், உலகத்தமிழர் இயக்கத்தின் பொதுச்செயலாளரும் ஐ.நா. களத்தில் முனைப்புடன் செயலாற்றி வருபவருமான நிஷா பீரிஸ் அவர்களுடனான சிறப்பு உரையாடலின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் அவ்வுரையாடலில் ஐக்கிய நாடுகள் சபையின் அதி உயர் சட்ட அமைப்பான சர்வதேச நீதிமன்றம் அமெரிக்காவின் காலனிதித்துவத்தின் கீழ் இருக்கின்ற மொறிசியஸ் நாட்டினை காலனிதித்துவத்திலிருந்து விடுவிடுப்பததை மீளாவுக்கு உட்படுத்தும் வாய்ப்பு ஒன்று ஏற்பட்டது. ஐக்கிய இராஜ்ஜியமானது அத்தீவினை அமெரிக்காவுக்கு குத்தகைக்கு விட விரும்பியதால், தன்னிச்சையாக மொறிஸியசிலிருந்து சாள்ஸ் தீவுகளை பிரித்தது என்றும் அதனால் காலனித்துவதிலிருந்து சுதந்திரம் வழங்கியதில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறை தவறு என்ற கருத்தினை சர்வதேச உச்ச நீதிமன்றம் கொண்டிருந்தது.

இங்கேதான் அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவத் தளமான டியகோ கர்சியா அமைந்துள்ளது. சாள்ஸ் தீவின் மக்கள் மொறீஸியசிற்குச் சொந்தமானவர்கள் என்றும் அவர்கள் தங்கள் நாட்டுடன் இணைந்துகொள்வதற்குரிய உரிமையைக் கொண்டுள்ளார்கள் என்றும் சரிவதேச நீதிமன்றம் தெரிவித்தது.

இதனையே இலங்கையுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் இலங்கையை காலணித்துவத்திலிருந்து விடுவித்து சுதந்திரம் வழங்குகையில் அத்தீவிலுள்ள அனைத்து மக்களதும் அபிலாசைகளை நிறைவு செய்கின்றதா என்பதை உறுதிப்படுத்துவதில் ஐக்கியநாடுகள் சபை தவறிழைத்துவிட்டது. சுயநிர்ணய உரிமையை என்பது மோதலை உண்டுபண்ணுவது கிடையாது. மாறாக இச்சுயநிர்ணய உரிமையை மறுதலிப்பது தான் வன்முறைக்கு இட்டுச்செல்கிறது.

மேலும் தமிழர்களின் போராட்டங்கள் ஏன் முன்னேற்றம் காணவில்லை என்றால் சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களை பயங்கரவாதிகளாக வெளியுலகிற்கு சித்திகரிப்பதில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

முழுமையான காணொளி

Print Friendly, PDF & Email