SHARE
image_pdfPRINT

தமிழர் பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்குமுறையையும் கொடு.மைகளையும் ஊக்குவிக்கும் முகமாகவே ஐக்கிய நாடுகள் மனதி உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மானம் அமைந்துள்ளது. எனவே நியாயமற்ற .ஐ,நா.வின் தீர்மானத்தை முற்றாக நிராகரிக்கிறோம் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நாளை வியாழக்கிழமை ஐ.நா.வில் நடைபெறவுள்ள நிலையில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.