SHARE
image_pdfPRINT

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு மகசீன் சிறைச்சாலையில் உண்ணாவிதமிருக்கும் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து பயங்கரவாத சட்டத்தை ஒழிப்போம் எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை அடையாள உண்ணாவிரத போரட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

இந்தப் போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், பா.அரியேந்திரன், முன்னாள் அரசாங்க அதிபர் உதயகுமார் மற்றும் அரசியல்வாதிகள், வணபிதாக்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.