SHARE

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று  நடைபெறவுள்ளதோடு பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களும்   கலந்துக்கொள்ளவுள்ளர்.

ரணில் விக்கிரமசிங்க  ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதிக்கும்,பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையில்  இடம்பெறும்  முதலாவது  பேச்சுவார்த்தை இது என்பது குறிப்பிடதக்கது.

சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க முன்னெடுக்கும் செயற்பாடுகள்,பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இப்பேச்சுவார்த்தையின் போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  பொதுஜன பெரமுனவின்  சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்குவது தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ முன்வைத்த கோரிக்கை குறித்தும்   பரிசீலனை செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email