SHARE

இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கிடையிடலான 5 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் 5 வது நாளாகிய இன்று (5) தனது 2 ஆவது இனிங்ஸில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் பறிகொடுத்து 378 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து 7 விக்கெட்டுக்களால் ஆவது போட்டியை வெற்றி கொண்டதுடன் தொடரை 2-2 என்ற சமநிலையில் நிறைவு செய்தது.

நான்காவது நாளாகிய நேற்றைய அரைச்சதங்களுடன் இன்றும் ஆட்டத்தை தொடர்ந்த ஜோ ரூட் (142) ஜொனி பிரிஸ்ரோவ் (114) ஆகியோர் சதங்களை பெற்று ஆட்டமிழக்காது களத்தில் நிற்க, இங்கிலாந்து அணி வெற்றி இலக்கை தொட்டது.

இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி இங்கிலாந்துடனான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதியது. இதில் முதல் நான்கு போட்டிகள் நிறைவில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்க 5 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கடந்த முதலாம் திகதி இங்கிலாந்தின் பேர்மிங்கம் என்னும் இடத்தில் ஆரம்பமானது.

இதில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து இந்திய அணியை முதுலில் துடுப்பெடுத்தாட அழைக்க தனது முதல் இனிங்ஸில் இந்தியா 416 ஓட்டங்களையும் பதிலுங்கு இங்கிலாந்து தனது முதல் இனிங்ஸில் 284 ஓட்டங்களையும் பெற்றது.

இதனையடுத்து தனது 2 ஆவது இனிங்ஸில் சகலவிக்கெட்டுக்களையும் இழந்து 245 ஓட்டங்களைப்பெற்ற இந்தியா, இங்கிலாந்துக்கு 378 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயிக்க தனது 2 ஆவது இனிங்ஸை 4 ஆவது நாளாகிய நேற்று மதிய போசன இடைவேளையின் பின் ஆரம்பித்த இங்கிலாந்து 5 ஆவதும் இறுதி நாளுமாகிய இன்று 3 விக்கெட்டுக்களை இழந்து 378 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கியது.

Print Friendly, PDF & Email