SHARE

ப.சுகிர்தன்

ஐசிசி ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் அதிகூடிய ஓட்டங்களை பெற்ற அணியாக இங்கிலாந்து அணி இன்று (17) உலக சாதனை படைத்துள்ளது.

தற்போது நடைபெற்றுவரும் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி இப்புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது.

முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 498 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐசிசி ஒருநாள் போட்டி ஒன்றில் ஒரு அணி பெற்ற ஆகக்கூடிய ஓட்ட எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது.

போட்டியில் இங்கிலாந்து அணி சார்பில் ஜோஸ் பட்லர் 162 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்தார்.

Print Friendly, PDF & Email