SHARE

சுகிர்தன்
இலங்கைக்கு சுற்றுப்பயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியாவை 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் எதிர்கொண்ட இலங்கை அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று சொந்த மண்ணில் தொடரைக் கைப்பற்றியது.

இன்று நடைபெற்ற 5 ஆவதும் இறுதியுமான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருந்த போதிலும் 4 ஆவது போட்டியிலேயே தொடரின் வெற்றியை உறுதிசெய்த இலங்கை அணி கிண்ணத்தை கைப்பற்றியது.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று (24) நடைபெற்ற 5 ஆவது இறுதியுமான ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயித்த 161 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 39.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களைப்பெற்று 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

வெறும் 19 ஓட்டங்களை பெறுவதற்குள்ளேயே 3 விக்கெட்டுக்களை பறிகொடுத்து ஆரம்பம் சற்று தடுமாறிய அவுஸ்திரேலிய அணிக்கு மிச்செல் மார்ஷ் – மார்னுஸ் லபுஸ்சான் இணை நிலையாண ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆறுதல் அளித்தனர். எனினும் அணி 50 ஓட்டங்களை எட்டியபோது அறிமுக வீரர் மதுஷானின் பந்துவீச்சில் மார்ஷ் 24 ஓட்டங்களுடன் ஆட்டமிளந்தார்.

தொடர்ச்து லபுஸ்சான், அலெக்ஸ்கோரி ஆகிய இருவரும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி 5 ஆவது விக்கெட்டிலி; 51 ஓட்டங்களை பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கையை 101 ஓட்டங்களாக உயர்த்தினர். இந்தநேரத்தில் 58 பந்துகளில் 31 ஓட்டங்களை குவித்திருந்த லபுஸ்சான் ஆட்டமிழந்து செல்ல நிதானத்தை இழக்காமல் துடுப்பெடுத்தாடிய அலெக்ஸ்கேரி தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

அலெக்ஸ் கேரி 65 பந்துகளை எதிர்கொண்டு 45 ஓட்டங்களுடனும் கெமரன் க்றீன் 26 பந்துகளில் 25 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்ப்பாக துனித் வெல்லாலகே, மஹீஷ் தீஷன ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

மறுபக்கத்தில் ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 4வர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 160 ஓட்டங்களைப்பெற்றது.

இந்த போட்டியின் நிறைவில் அரங்கிலிருந்த ரசிகர்கள் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையிலும் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய அவுஸ்திரேலிய அணிக்கு நன்றிகள் தெரிவித்து கரகோசங்கள் எழுப்பியதுடன் Thank You Australia என்ற வாசங்கங்களுடனான பதாகைகளை காண்பித்து அவுஸ்திரேலிய அணிக்கு நன்றி தெரிவித்தனர்.

Print Friendly, PDF & Email