SHARE

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள் எழுச்சி பெறுகின்றனர் என்று இந்தியாவில் இருந்து வெளிவரும் ‘த ஹிந்து’ நாளேடு செய்தி வெளியிட்டதன் பின்னணியில் இலங்கை அரசின் பலமான நபர் ஒருவர் உள்ளார் என்று சிங்கள இணையத்தளம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று புதன்கிழமை அந்த இணையத்தளத்தில் வெளியான செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அண்மைக் காலமாக இடம்பெற்ற சில சம்பவங்களின் பின்னணியில் நாட்டின் முன்னணி அரசியல் கட்சி ஒன்றின் பலமான ஒருவர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பெரிதும் காரணமானவர். அண்மைக்காலமாக அவர் அமைச்சராக பதவி வகித்தமைக்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கடும் எதிர்ப்பு காரணமாக சற்றே அமைதியான கொள்கையை கடைப்பிடிப்பதாகத் தெரிகின்றது.

அண்மையில் காலி முகத்திடல் மைதானம் மீதான தாக்குதல் மற்றும் அரசியல் உறுதியற்ற தன்மைக்கு காரணமான பிரதி சபாநாயகர் பதவிக்கான தேர்தல் கிட்டத்தட்ட 9 மில்லியன் ரூபா செலவில் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னணியில் அவர் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு பெண் ஒருவரை நியமிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்ததையடுத்து ரோகினி கவிரத்னவின் பெயர் நேற்று ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்மொழியப்பட்டது.

அண்மையில் இலங்கையில் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் என எச்சரித்திருந்த ‘த ஹிந்து’ நாளேட்டின் ஆசிரியர் கலாநிதி சுப்ரமணிய சுவாமியின் மகள் ஆவார்.

சுப்ரமணிய சுவாமி இந்த நாட்டின் பலம் வாய்ந்த அரசியல் குடும்பத்துடன் மிக நெருங்கிய தொடர்புள்ளவர் என்பதும் இந்த முன்னாள் அமைச்சர் – தனது குடும்பத்தில் உள்ள பிற அரசியல்வாதிகளை விட சம்பந்தப்பட்ட நாட்டோடு மிக நெருக்கமாக பணியாற்றி வருவது பகிரங்கமான இரகசியம் ஆகும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email