SHARE
image_pdfPRINT

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு நாடாளுமன்றத்தினால் கோரிக்கை விடுக்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை கட்டுப்படுத்த ஜனாதிபதியை பதவி விலகுமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றம் தலையிட வேண்டும் என கோரியது. எவ்வாறாயினும், ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோருவதற்கு நாடாளுமன்றத்திற்கு எந்தவொரு ஜனநாயக உரிமையும் கிடையாது என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடியை ஜனநாயக வழிகளில் தீர்க்க வேண்டும் என்றும் ஜனாதிபதியை தெரிவு செய்த மக்களே அது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.