SHARE
image_pdfPRINT

நாட்டின் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், டிசல், மண்ணெண்ணை தட்டுபாடு போன்றவற்றுக்கு எதிராகவும் நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் பொகவந்தலாவை டின்சின் நகரில் இன்று (4) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது பொகவந்தலாவ கொட்டியாகலை பகுதியில் இருந்து பேரணியாக பொகவந்தலாவ செவ்வகத்தை சந்தி வரை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை வெளியேறுமாறு கோஷங்கள் எழுப்பி பதாதைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.