SHARE

கொழும்பில் தொடரரும் பதற்ற நிலையையடுத்து கொழுப்பு வடக்குஇ தெற்குஇ மத்திய கொழும்புஇ நுகேகொட ஆகிய பிரதேசங்களில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் பெரும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக இன்று இரவு ஜனாதிபதி கோட்டபாய இல்லத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி அலுவலகம் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தியதுடன் கலகக்காரர்களை அடக்க கண்ணீர் புகைக்குண்டு வீசிய பொலிஸ் வாகனம் மீதும் கல்வீச்சு நடத்தினர். தவிர மக்களை மோதித்ததள்ளிய இராணுவ வாகனத்தையும் தீயிட்டுக்கொழுத்தினர்.

அதேவேளை பொலிஸ் தடைகளை உடைத்து உள்நுழையவும் முயற்சித்துள்ளனர். இதன் போது பெருமளவிலான இராணுவத்தினரும் பொலிஸாரும் கொழும்பு வீதி எங்கும் குவிக்கப்பட்டுள்ளதுடன் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே தொடர் முறுகல்கள் இடம்பெற்று வருகின்றன.

நள்ளிரவைத்தாண்டியும் தொடரும் இந்த போராட்டக்களத்தை நோக்கி வெளிப்பிரதேசங்களிலிருந்து மக்கள் படையெடுத்து வருவதால் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குசட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி கோட்டபாய அவரது இல்லத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Print Friendly, PDF & Email