SHARE

ஜெகத் ஜெயசூரியா மீது போர்க்குற்ற விசாரணை நடத்தத்தவறிய அவுஸ்திரேலியா ;புதிய மக்னெஸ்கி சட்டத்தின் கீழ் தடைசெய்ய மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு கொடூர யுத்தத்தில் அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்த இராணுவப்படைக்கு தலைமைதாங்கிய சிறிலங்காவின் ஓய்வுபெற்ற ஜெனரல் ஜெகத் ஜெயசூரியா போர்க்குற்வாளி என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் அவுஸ்திரேலியாவிற்குள் விஜயம் செய்ய அனுமதித்ததுடன் அவர்மீது பொலிஸார் விசாரணை நடத்தத் தவறியுள்ளனர் என கவலை வெளியிட்டுள்ள புலம் பெயர் தமிழர்களும் மனித உரிமை அமைப்புக்களும் அவர் மீது அவுஸ்திரேலியா தடைவிதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன.

பிரித்தானியாவிற்கும் ஏனைய வெளிநாட்டு அரசாங்கங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளைத் தொடர்ந்தே, அவுஸ்திரேலியாவிலும் ஜயசூரியாவைத் தடைசெய்யவேண்டும் என்ற விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

மக்னிஸ்கை தடைகள் என்று அறியப்படும் அவுஸ்ரேலியாவின் புதிய மனித உரிமைகள் தடைச்சட்டத்தினைப் பயன்படுத்தி ஜெயசூரியாவைத் தடைசெய்யுமாறு அவுஸ்ரேலிய அரசாங்கத்தை வலியுறுத்தும் 100 பக்கங்களைக் கொண்ட முதலாவது மனு நடப்பு மாதம் 4ஆம் திகதி (மார்ச் 2022) தாக்கல் செய்யப்பட்டிருந்த போதிலும் அதனை கண்டுகொள்ளாத நிலையிலேயே மேற்படி புலம்பெயர் தமிழர்களும் மற்றும் மனித உரிமை அமைபப்புக்களான சர்வசே உண்மை மற்றும் நீதித்திட்டத்திற்கான செயற்திட்டம் (ITJP) சர்வதேச நீதிக்கான மத்திய மையம் (ACIJ) தமிழ் ஏதிலிகள் கழகம் ஆகியனவும் தடைக்கோரிக்கை விடுத்துள்ளன.

அதேவேளை ஜெகத் ஜெயசூரியா தொடர்பாக கடந்த 4 ஆம் திகதி முறைப்பாடு செய்தபோது அதனை கண்டுகொள்ளாது விட்டதுடன் தொடந்தும் அவரை அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய அனுமதித்தமைக்காக பொலிஸாரை கண்டுத்துள்ள மேற்படி அமைப்புக்கள் பொலிஸாரின் அலட்சியம் தொடர்பாகவும் விசாரணை நடத்தவேண்டும் என சட்டமா அதிபருக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

தவிர அவுஸ்திரேலிய உள்நாட்டுத்திணைக்களும் மற்றும் கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகம் ஆகியவற்றின் தவறான நடவடிக்கை மீதும் விசாரணை நடத்த அழைப்பு விடுத்துள்ளன.

போர்க்குற்றவாளியான ஜெகத் ஜெயசூரிய கடந்த 2019 ஆம் ஆண்டு தனது குடும்ப உறுப்பினர்களை சந்திப்பதற்காக அவுஸ்திரேலியா வந்தது மட்டுமன்றி மெல்போணில் நடந்த பொது நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார். இதன் போது ஐவுதுP, சர்வதேச நீதிக்கான அவுஸ்ரேலிய மையம், மனித உரிமைகள் சட்ட அமையம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து அவுஸ்ரேலியச் சட்டத்திலுள்ள சர்வதேச சட்டஅதிகார வரம்பின் கீழ் ஜயசூரியா மீது அவசர குற்ற விசாரணையை நடத்துமாறு அவுஸ்ரேலிய காவல்துறைக்கு எழுதின. தொடர்ந்து, கொடுமைகள், சித்திரவதைகளிலிருந்து உயிர்தப்பியவர்கள், சாட்சிகள் 40 பேருடைய ஒருதொகுதி வாக்குமூலங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை வரைவினையும் அவர்கள் சமர்ப்பித்திருந்தார்கள்.
எனினும் குற்றஞ்சாட்டப்பட்டவர் சட்ட அதிகார வரம்பிற்குள் இருந்தும், அவர் மீண்டும் திரும்பவும் வருவதற்கான சாத்தியங்கள் இருந்தும் பாரதூரமான சர்வதேசக் குற்றச்செயல்கள் தொடர்பான அறிக்கைகளை சிரத்தை எடுத்து விசாரணை செய்யத் தவறியதனூடாக பொறுப்புக்கூறலை சிறுமைப்படுத்துவதாக அவுஸ்ரேலிய காவல்துறை மேற்படி இவ்வமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

மனித உரிமை அமைபப்புக்களான சர்வசே உண்மை மற்றும் நீதித்திட்டத்திற்கான செயற்திட்டம் (ITJP) சர்வதேச நீதிக்கான மத்திய மையம் (ACIJ) தமிழ் ஏதிலிகள் கழகம் ஆகியன இணைந்து இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு,

Media-Release-TimeToSanction-Jayasuriya

ITJP_JJ_australia_infographic_TAMIL

Print Friendly, PDF & Email